பிரபல நெட்ஒர்க் நிறுவனம் திவால் என அறிவிப்பு! இந்தியாவை விட்டு வெளியேறவும் முடிவு!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் செயல்பட்டு வரும் அமெரிக்க சாட்டிலைட் பிராட்பேண்ட் நிறுவனமான ஹூகெஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ் (Hughes Network Systems) இந்தியாவில் தனது இணைய சேவையை நிறுத்திக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் அறிவிப்பினால் 30 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான நிலுவைத் தொகை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

ஏற்கனவே ஏர்டெல் வோடபோன் ஐடியா சிக்கி தவிக்க, இந்த வரிசையில் ஹூகெஸ் நிறுவனம் 600 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனம் தற்போது திவால் ஆகிவிட்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

பாதுகாப்பு, வங்கித் துறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்டர்நெட் சேவை அளித்து வரும் இந்த நிறுவனம், திவால் ஆகி விட்டதால் நிலுவைத் தொகையை செலுத்த முடியாது எனவும், இந்தியாவை விட்டு வெளியேறவும் முடிவு எடுத்துள்ளதாக தொலைத் தொடர்பு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hughes Network Systems announced stop service in India


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->