ஊரடங்கு காலத்தில்.. பணத்தை சேமிப்பது எப்படி..? - Seithipunal
Seithipunal


ஊரடங்கு உத்தரவால் பலரும் வேலையின்றி தவித்து வருகின்றனர். இச்சமயத்தில் செலவுகளை தவிர்த்து பணத்தை எப்படி சேமிக்கலாம்? என்பதை பற்றி பார்ப்போம்.

பணத்தை சேமியுங்கள் :

ஊரடங்கால் அனைவரும் வீட்டில்தான் இருக்கிறோம். சமையல் செலவு, மருத்துவ செலவுகள் தவிர வேறு அத்தியாவசிய செலவுகள் இச்சமயத்தில் இருக்க வாய்ப்பில்லை. ஆகையால், பணத்தின் சேமிப்பை அதிகப்படுத்துங்கள். இச்சமயத்தில் சேமிப்பு மிக முக்கியமான ஒன்று. உங்களின் இந்த சேமிப்பு பின்னாளில் பயனுள்ளதாக அமையும்.

பட்ஜெட் திட்டம் :

தினசரி செய்யும் செலவுகளை எழுதி அதை தினமும் கணக்கிடுங்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறது? எவ்வளவு பணம் சேமித்து வைக்கலாம்? என்பதை திட்டமிடுங்கள். இதுவரை பட்ஜெட் திட்டம் இல்லை என்றாலும் இப்பொழுதில் இருந்து செயல்படுத்துங்கள்.

தேவையற்ற செலவுகளை குறையுங்கள் :

இந்த சூழலில் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பணத்தை செலவு செய்யுங்கள். தேவையற்ற செலவுகளை முடிந்தளவு தவிர்த்துவிடுங்கள்.

ஹெல்த் இன்சூரன்ஸ் :

மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் பணம் சேமித்து வருகிறீர்கள் எனில் அதில் கவனம் செலுத்துங்கள். இந்த சமயத்தில் மருத்துவ காப்பீட்டு திட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு பணத்தை எடுத்துக்கொள்ளும் திட்டங்கள், வழிமுறைகள், கேள்விகள், குழப்பங்கள் போன்றவற்றை கேட்டு தெளிவுப்படுத்தி கொள்ளுதல் அவசியம்.

சேமிப்பை அதிகப்படுத்த இதை நினைவில் கொள்ளுங்கள் :

எதை வாங்கினாலும் திட்டமிட்டு வாங்குங்கள்.

உங்களுக்கு என்ன தேவை? மற்றும் என்ன விருப்பம்? என தெரிந்து கொள்ளுங்கள்.

சேமிப்புகளுக்கு இலக்கு வைத்துக் கண்டிப்பாக பின்பற்றுங்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to save money


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->