இனி ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வாங்க முடியாது போலையே? அதிரவைத்த நீதிபதிகள்.!  - Seithipunal
Seithipunal


தனி நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வாங்க கூடாது என ஏன் கட்டுப்பாடுகள் கொண்டு வர கூடாது? உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்கை  விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்தனர், அப்போது  மத்திய அரசின் 'அனைவருக்கும் வீடு' திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படுவது எப்பொழுது என கேள்வி எழுப்பினர்.

மேலும், நாட்டில் எத்தனை பேருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது எனவும் கேள்விகளை எழுப்பினர். ஒரு தனி நபர் வாங்கும் இரண்டாவது வீட்டிற்கான பத்திரப்பதிவு, வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் ஏன் இரண்டு மடங்குகளாக உயர்த்த கூடாது என வினாவிய நீதிபதிகள். இது குறித்த விளக்கத்தினை மத்திய, மாநில அரசுகள் மார்ச் ஆறாம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டு என உத்தரவு பிறப்பித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

high court condition to buy second house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->