வரி செலுத்துவோர் மூன்றாக பிரிப்பு.. GST கணக்கு தாக்கல் செய்ய புதிய தேதிகள் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்யவதற்கான இறுதி நாட்களை நிதித்துறை அமைச்சகம் மாற்றி அமைத்துள்ளது.

வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டோர் தங்களது ஜி.எஸ்.டி. கணக்குகளை தாக்கல் செய்ய தற்போதுள்ள நடைமுறைப்படி  ஒவ்வொரு மாதம் 20-ந் தேதி கடைசி நாளாக இருக்கிறது. 

ஜி.எஸ்.டி. கணக்குகளை தாக்கல் செய்யும் பெரும்பாலானோர் இறுதி நாளில் தங்களது கணக்குகளை தாக்கல் செய்வதால் நெட்வொர்க் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு ஜி.எஸ்.டி. கணக்குகளை செலுத்தும் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் வரி செலுத்துவோரை மூன்றாக பிரித்து கணக்கு தாக்கல் செய்வதற்கு மூன்று இறுதி நாட்களை மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி ஆண்டுக்கு ரூ.5 கோடி மற்றும் அதற்கு மேல் வர்த்தகம் செய்வோர் (8 லட்சம் பேர்) ஒவ்வொரு மாதமும் 20-ந் தேதிக்குள்ளும், 5 கோடி ருபாய்க்கு குறைவாக வர்த்தகம் செய்வோரில் தமிழ்நாடு, புதுச்சேரி, மராட்டியம், கர்நாடகம் உள்ளிட்ட 15 மாநிலங்களை சேர்ந்தவர்கள் (49 லட்சம் பேர்) ஒவ்வொரு மாதமும் 22-ந் தேதிக்குள்ளும், மற்ற 22 மாநிலங்களை சேர்ந்தவர்கள் (46 லட்சம் பேர்) ஒவ்வொரு மாதமும் 24-ந் தேதிக்குள்ளும் தங்களது கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என த்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gst and tax paying last date changed by finance ministry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->