ஒரே நாளில் தடாலடியாக உயர்ந்த தங்கத்தின் விலை!! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!! - Seithipunal
Seithipunal


தங்கத்தின் விலை கடந்த மே மாதத்தில் விலை குறைவாக காணப்பட்டது. பின்னர் ஜூன் மாதத்தின் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்துகொண்டே வருகிறது.

இந்த மாதத்தில் கடந்த18 நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றத்துடனே இருந்து வருகிறது.

அதன்படி, இன்று சவரனுக்கு 464 ரூபாய் வரை உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ3,625 ஆகவும்., ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.27,368விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1000 ரூபாய் வரை தங்கம் விலை உயர்ந்துள்ளது இதே போல் இன்றும் உயரும் பட்சத்தில் 28000 த்தை கடக்க வாய்ப்புள்ளது.  

அதே போல் 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,265 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.26,120 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது.  

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 41.20 காசுகளுக்கும், கிலோ ரூ.41200 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது. 

சென்னையில் இதுகுறித்து நிபர்களிடம் கூறிய தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி. சீனா மற்றும் அமெரிக்க்கா போன்ற நாடுகள் மறைமுகமாக பொருட்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது மேலும் சுங்க வரிகளையும் விதித்துள்ளது. இதனால் தான் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது மேலும் இந்த வருடத்தின் முடிவில் 30000 வரை தங்கம் விலை உயரும் என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gold rate hike


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->