இன்று ஒரே நாளில் உச்சத்தை எட்டிப்பிடித்த தங்கம் மற்றும் வெள்ளி விலை.! அதிர்ச்சியில் திகைக்கும் இல்லத்தரசிகள்.!! - Seithipunal
Seithipunal


தங்கத்தின் விலை கடந்த மே மாதத்தில் விலை குறைவாக காணப்பட்டது. பின்னர் ஜூன் மாதத்தின் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்துகொண்டே வருகிறது.

இந்த மாதத்தில் கடந்த18 நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றத்துடனே இருந்து வருகிறது.

அதன்படி, இன்று சவரனுக்கு  512 ரூபாய் வரை உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ3,367 ஆகவும்., ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.26,936 விற்பனை செய்யப்பட்டது. இதே போல் இன்றும் உயரும் பட்சத்தில் 27000 த்தை கடக்க வாய்ப்புள்ளது.  

அதே போல் 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,211 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.25,688 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது.  

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து 40.90 காசுகளுக்கும், கிலோ ரூ.40900ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது. 

சென்னையில் இதுகுறித்து நிபர்களிடம் கூறிய தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி. சீனா மற்றும் அமெரிக்க்கா போன்ற நாடுகள் மறைமுகமாக பொருட்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது மேலும் சுங்க வரிகளையும் விதித்துள்ளது. இதனால் தான் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது என்று கூறினார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gold price today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->