இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்ட மாற்றம்!! - Seithipunal
Seithipunal


மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதன் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது பின்னர் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது 

அதன்படி, இன்று சவரனுக்கு 64 ரூபாய் வரை உயர்ந்து 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,602 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.28,816 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது. 

அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,759 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30,072 விற்பனை செய்யப்பட்டது. இதே போல் இன்றும் உயரும் பட்சத்தில் 31,000 த்தை கடக்க வாய்ப்புள்ளது.   

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 48.20 காசுகளும், கிலோ வெள்ளி ரூ.48,200.ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது. 

உலகளவில் தங்கத்தின் விலை நிலையாக இருந்து வரும் நிலையில். நியூயார்க் மற்றும் அமெரிக்கா நகர தங்கச்சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 1,413 டாலர்கள் என்ற அளவில் உள்ளது. நேற்றைய பட்ஜெட்டில் இறக்குமதி வரி 12.5 சதவீத உயர்த்தப்பட்டதால் இறக்குமதி வரியால் இங்கு தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது மேலும் தங்கத்தின் விலை உயரும் என எதிர்பார்ப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gold and silver price rate on august 22


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->