வாடிக்கையாளருக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல்.! - Seithipunal
Seithipunal


சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 200க்கு மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் மனித இனத்திற்கு ஏற்பட்ட பேரழிவு என கூறுகின்றனர். 

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 7,68,460 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 36,914 பேர் இந்த வைரசால் பலியாகியுள்ளனர். 

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 227 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்தம் 1251 கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 102 பேர் உடல்நிலை சரி செய்யப்பட்டு வீட்டிற்கு திரும்பியுள்ள நிலையில், 32 பேர் இறந்துள்ளனர்.

இந்நிலையில், ரீசார்ஜ் செய்ய முடியாத சந்தாதாரா்களின் வேலிடிட்டி ஏப். 20 வரை நீட்டிப்பு மற்றும் ரூ.10 டாக் டைம் வழங்கப்படும் என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதை அடுத்து ஏப்ரல் 17ம் தேதி வரை இன்கமிங் வசதி இலவசம், ரூ.10 டாக் டைம் வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

free call for airtel


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->