ஜியோவை பின்னுக்கு தள்ளி., முதலிடத்தை பிடித்த ஏர்டெல்!! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் மொபைல்போன் இணைய சேவையின் வேகம் குறைவாக இருந்ததாக, பிராட்பேண்ட் அளவீட்டுக்கான ஓக்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. இணைய வேகத்தை அதிவிரைவாக வழங்குவதில்   ஜியோவை பின்னுக்குத் தள்ளி பார்தி ஏர்டெல் முன்னணியில் இருப்பதாக கூறியுள்ள ஓக்லா, வோடபோன் நிறுவனம் எந்தவித ஏற்றம் இறக்கமும் இல்லாமல் சீரான வேகத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மொபைல் போன்களில் டவுன்லோடு செய்யப்படும் வேகத்தை வைத்து அளவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஓக்லா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்தாண்டு ஜூலை மாதம் வரை ஏர்டெல் நிறுவனமே வேகமான சேவையை வழங்கியிருப்பதாகக் கூறியுள்ளது.

பிராட்பேண்ட் பொறுத்தமட்டில் இணைய வேகத்தை அதிவிரைவாக வழங்குவதில் ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் அதன் பின்னரே ஜியோ இருப்பதாகவும் ஓக்லா நிறுவனம் வரிசைப்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

airtel beat jio


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->