மீண்டும் மலைபோல் உயர்ந்த தங்கத்தின் விலை! நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதன் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. இடையில் சில நாட்கள் ஏற்றம் காணாத தங்கம், கடந்த சில நாட்களாக அதிவேகமாக விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 

தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 392 ரூபாய் குறைந்தது. 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3578.00ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.28,624. ஆகவும் நேற்று விற்பனை செய்யப்பட்டது. இன்று கிராமுக்கு 40 ருபாய் உயர்ந்து கிராம் 3618 ரூபாயாகவும், சவரன் 28944 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. 

அதே போல் நேற்று  24 கேரட் அளவிலான தங்கம், ஒரு கிராம் ரூ. 3733.00 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.29,864 விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் ரூ. 3775.00 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 30200 விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

again gold rate increase


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->