தமிழகத்தின் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம்தேதியும் டாஸ்மாக் கடைகள் கடைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் கிர்லோஷ் குமார் அனுப்பிய கடிதத்தில் டாஸ்மாக் கடைகள், பார்கள் இணைந்த கடைகள் ஏப்ரல் 4ஆம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே இரண்டாம் தேதி மூடப்பட வேண்டும். 

மேலும் இது குறித்து தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளை மூடுவதற்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிப்பதுடன், இந்த நாட்களில் சட்டவிரோத மது பானங்களை கடத்துவோர், பதுக்குவோரிடம் இருந்து பறிமுதல் செய்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 days holidays for tasmac


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->