தமிழகத்தில் மறு உத்தரவு வரும்வரை 38 வங்கிகள் இயங்காது.!! - Seithipunal
Seithipunal


நேற்று கொரோனாவால் 771 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்துள்ளது. இன்று 31 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 1,506 ஆக உயர்ந்துள்ளது. இன்று 2 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் ஏற்கனவே 2,008 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 324 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. கடலூரில் 98 பேருக்கும், செங்கல்பட்டில் 9 பேருக்கும், விழுப்புரத்தில் 5 பேருக்கும், அரியலூரில் 188 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 45 பேருக்கும், மதுரையில் 20 பேருக்கும், திருவண்ணாமலையில் 17 பேருக்கும், திண்டுக்கல்லில் 9 பேருக்கும், திருவாரூர், திருநெல்வேலி, சேலம் மற்றும் தென்காசியில் ஒருவரும், தேனியில் இருவருக்கும், திருவள்ளூரில் 35 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அரியலூர் நகரம், செந்துரை மற்றும் திருமானூரில் கொரோனா கண்டறியப்பட்டது. அப்பகுதியில் உள்ள வங்கிகள் கடந்த 16ஆம் தேதி முதல் மூடப்பட்ட நிலையில், தற்போது திருமானூரில் யாருக்கும் வருவதில்லை என்பதால் அங்கு உள்ள வங்கிகள் தவிர்த்து, அரியலூர் நகரம் மற்றும் செந்துறை பகுதியில் மூடப்பட்டுள்ள 38 வங்கிகள் மறு உத்தரவு வரும் வரை இயங்காது என அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

38 bank closed in ariyalur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->