3 நாட்களுக்கு மது கடைகளுக்கு விடுமுறை.. அரசு அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகிற 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை இரவு 7 மணி உடன் நிறைவடைகிறது. 

இந்நிலையில், நாளை முதல் 6-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் குடோன்களில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்லவேண்டிய மதுபானங்கள் கடந்த சில தினங்களாக கொண்டு செல்லப்படவில்லை. 

அதிக அளவில் மதுபானங்களை வாங்கி குவிப்பதை தடுப்பதற்காக 30 சதவீதத்திற்கு மேல் விற்பனையாகும் கடைகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மூன்று நாட்கள் தொடர்ந்து குடிக்க முடியாது என்பதால் மது பிரியர்கள் முன்னேற்பாடாக குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு குவார்ட்டர் வீதம் மூன்று நாட்களுக்கு மதுபாட்டில்களை வாங்கி வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 days tasmac shops closed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->