தொடர்ந்து குறையும் ஆபரணத் தங்கத்தின் விலை.! எவ்வளவு தெரியுமா?
19 01 2023 today gold and silvar price
தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். காரணம் பெண்களுக்கு தங்கத்தின்மீது ஆசை இல்லை பேராசை. குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு மற்ற மாலிங்களில் உள்ளவர்களை விட தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம்.
அதனால் தான் தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் தமிழகம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 10 ரூபாய் குறைந்து 5295 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 42360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று சென்னையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5 ரூபாய் குறைந்து 5290 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்து 42320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளி கிராம் ஒன்று 73.50 ரூபாய்க்கும் கிலோ ஒன்று 73500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
19 01 2023 today gold and silvar price