பூமியின் ரத்த நாளங்களான நதிகளை காக்க வேண்டியது நமது கடமை : வைரலாகும் பிரபல நடிகரின் வீடியோ! - Seithipunal
Seithipunal

நதிகள் மீட்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் மிக வைரலாகியுள்ளது. தமிழ்நாட்டின் கோவையிலுள்ள ஈஷா மையம் அமைப்பு சார்பில் நதிகளை மீட்போம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது செப்டம்பர் மாதம் 3ம் தேதி துவங்கிய இந்த பிரச்சாரம் அக்டோபர் மாதம் 2ம் தேதி வரை நடக்கிறது.இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியான பிரச்சார கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. அக்கூட்டத்தில் ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். நதி நீர் இணைப்பிற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்று அப்போது வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் ரத்த நாளங்கள் இல்லையென்றால் உடம்பு இயங்காது. பூமியின் ரத்த நாளங்களான நதிகளை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. இந்தியாவிலுள்ள அனைத்து நதிகளைகளையும் ஜீவ நதியாக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். https://youtu.be/vif8FM_-ayY

கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal