மது போதையில், அந்த விஷயத்தில் அதீத இன்பம் கிடைப்பது உண்மையா.?! அச்சம் தரும் சில உளவியல் விஷயங்கள்.! - Seithipunal
Seithipunal


உறவுக்கு முன்பு மது அருந்தினால் நல்ல உத்வேகத்துடனும், செயல்திறனுடனும் ஈடுபடமுடியும் என்ற எண்ணம் மக்களிடம் பரவலாக உள்ளது. ஆனால் உண்மையைக் கூறவேண்டும் என்றால் மது செயல்திறனை மட்டுமல்லாமல் உறவின் மீதுள்ள ஆர்வத்தையும் குறைத்துவிடும். பொதுவாக மது அருந்திவிட்டு உடலுறவுக்கு அழைக்கும் ஆண்களைப் பெண்களுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. குடித்து விட்டு உறவில் ஈடுபடும் ஆண்களால் நிலையாக இருக்கமுடியாது. பெண்களுக்கு உணர்வு ஏற்படும் நேரத்தில் இவர்கள் போதையில் படுத்துவிடுவார்கள்.

பொதுவாகப் போதையில் இருப்பவர்களுக்கு நேரம் போவதே தெரியாது, உறவின் போது போதையாக இருப்பவர்களுக்கு ரொம்ப நேரம் உறவில் ஈடுபட்டது போலத் தெரியும், ஆனால் சிறிது நேரம் மட்டுமே ஈடுபட்டிருப்பீர்கள். அந்தப் பெண்ணும் போதையில் இருப்பதால் சோர்வில் நீங்கள் செய்தலும், செய்யாவிட்டாலும் கவலைப்படமாட்டார்கள். தொடர்ந்து மது அருந்தினால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படும். ஆண்களுக்குச் செக்ஸ் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும்போது கல்லீரல் தான் அதைக் கட்டுப்படுத்தும். கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால் ஹார்மோன் சுரப்பில் பிரச்சனை ஏற்படும், உடலுறவில் செயல்திறன் சுத்தமாக இருக்காது.

அதேபோல ஆணுக்குக் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால் விறைப்புத்தன்மை குறையும், விறைப்புத் தன்மை குறைந்தால் எந்தப் பெண்ணுக்கும் உறவுகொள்ளப் பிடிக்காது. மது அருந்தினால் மனஅழுத்தம் இன்றி உடலுறவில் ஈடுபடமுடியும் என்று கூறுவார்கள், இது உண்மை தான்! போதையில் இருப்பதால் மனஅழுத்தம் குறைந்திருக்கும், உங்களை அறியாமல் உடலுறவுக்கு முற்படுவீர்கள். ஆனால் செயல்திறன் மட்டும் எக்குத்தப்பாக இருக்கும்.

மது அருந்துவதால் வாயில் ஒரு வகைத் துர்நாற்றம் ஏற்படும், உடலுறவில் ஈடுபடும் போது பிரெஞ்ச் முத்தம் கொடுக்க நேரிடும்! அந்தச் சமயங்களில் உங்கள் வாயில் துர்நாற்றம் அடித்தால், காதலி/மனைவிக்கு வாந்தி வருமே தவிர, ஆசை வராது. அதேபோலப் போதையில் கண்முன் தெரியாமல் செயல்படுவார்கள், இது ஆபத்தில் கொண்டு போய்விடும். அண்மையில் கூடப் போதையில் துப்பாக்கியுடன் உறவில் ஈடுபட்ட தம்பதியினர் தவறுதலாகப் பிறப்புறுப்பில் சுட்டுக்கொண்டனர். மது தாம்பத்திய வாழ்க்கையைப் பாதிப்பது இல்லாமல் உடல் நலத்தையும் உறவையும் அழித்துவிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Liquor drinks with romance will be irrigate your wife


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->