ஓர்(தன்)பாலின சேர்க்கை குறித்த உண்மை தகவல் என்ன?..!! - Seithipunal
Seithipunal


ஆண்களின் ஓரிச்சேர்க்கையை கே (Gay) என்று கூறப்படுகிறது. பெண்களின் ஓரினச்சேர்க்கையை லெஸ்பியனிஸம் கூறப்படுகிறது. இந்த இரண்டையும் சேர்த்து பொதுவாக ஹேமாசெக்ஸ் (ஓரினச்சேர்க்கை) என்று கூறப்படுகிறது. 

வெகு காலத்திற்கு இந்த ஓரினச்சேர்க்கையானது மனிதர்களுக்கு மட்டுமான ஒரு விசித்திர மனமாற்றம் என்று தான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால் இப்போது இந்த ஓரினச்சேர்க்கை வண்டு, ஆடு, குரங்கு மாதிரியான பல்வேறு விலங்குகளில் காணப்படுவதால் இது வெறும் மனிதர்களுக்கு மட்டுமான உணர்வு அல்ல என்பது புரிய வந்துள்ளது. 

இதற்கு ஒரே ஒரு காரணம் என்று எதையும் குறிப்பிட்டு சொல்வதற்கில்லை. மரபணுக்கள், சிசு வளரும் போது கர்ப்பப்பையினுள் ஏற்படும் இரசாயனங்கள், குழந்தையின் மூளையில் ஏற்படும் ஹார்மோன்கள் என்று பல காரணங்கள் இருக்கலாம். 

இது தவிர வளர்ப்பு முறை, அனுபவம், வாழ்க்கை, கல்வி போன்ற பல காரணங்களும் பாலியல் நடத்தையை நிர்ணயிக்கின்றன. உதாரணத்திற்கு கருவில் இருக்கும் குழந்தையின் ஆண்பால், பெண்பால் மரபணுக்களின் எண்ணிக்கை மாறுவதால் பாலியல் தடுமாற்றங்கள் ஏற்படலாம்.

அதுபோக மரபணு சரியாக இயங்கினாலும் அது உற்பத்தி செய்ய வேண்டிய ஆண் மற்றும் பெண்பால் ரசாயனம் சரியாக இயங்காவிட்டாலும் இந்த பிரச்சனை வரலாம். இது எல்லாமே சரியாக அமைந்தும் சிறு வயதிலேயே ஓரினச்சேர்க்கை பழக்கத்திற்கு உள்ளானவர்கள், இதுவே பிடித்து போவதால் அதிலே ஈடுபடுகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

know about gay and lesbian creation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->