அந்த மாதிரியான இன்ப பழக்கத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?.. கவனம்..! உங்களுக்குத்தான் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


சுய இன்பம் குறித்து பலருக்கும் பல புரிதல்கள் இருக்கும். கலவிக்கான மருத்துவரிடம் இதுகுறித்து கேட்டால், சுய இன்பம் என்பது தவறான விஷயமும் கிடையாது. உடலுக்கு ஆரோக்கியமானது என்று கூறுவார்கள். ஆனால், எதிலும் அளவு என்பது மிகவும் அவசியம். 

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற வாசகம், சுய இன்ப பழக்கத்திற்கும் நன்றாக பொருந்தும். அளவுக்கு மீறி சுய இன்பம் மேற்கொண்டால், அதனால் பல உடல்நல பிரச்சனைகள் மற்றும் எதிர்கால தாம்பத்திய வாழ்க்கை தடம் புரளுதல் போன்ற நிகழ்வுகளும் ஏற்படும். 

முதலில் ஒருமுறை சுய இன்பம் கண்டதும், மீண்டும் அதனை காண வேண்டும் என்று தோன்றினால், கட்டாயம் அதனை செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால், அளவுக்கு அதிகமான சுய இன்பம் செய்வதாக அர்த்தம். 

தங்களின் துணையுடன் தாம்பத்தியம் என்ற உடலுறவு புணர்ச்சி மேற்கொள்ளாமல், சுய இன்பத்தில் மட்டுமே உங்களின் விருப்பம் இருந்தால், தாம்பத்திய இன்பத்தை விட சுய இன்ப திருப்தி உணர்வு அதிகம் இருந்தால், சுய இன்பத்தின் மீது நாம் கொண்டுள்ள விருப்பத்தை உணர்த்தும். இது மிகவும் ஆபத்தானது.

உங்களின் துணையுடன் தாம்பத்தியம் மேற்கொள்ளும் நேரத்தில் சிரமம் ஏற்பட்டால், அதிகளவு சுய இன்பத்தால் விந்து உருவாகுவதற்கான போதிய நேரத்தினை வழங்கவில்லை என்று அர்த்தம் ஆகும். அளவுக்கு அதிகமாக சுய இன்பம் கண்டால் முடி உதிரும் பிரச்சனை ஏற்படும். 

சிலர் சுய இன்பம் மேற்கொள்ளாமல் முடி உதிரும் பிரச்சனை கொண்டால், அதற்கும் சுய இன்பத்திற்கும் சம்பந்தம் இல்லை. இரண்டில் உள்ள வித்தியாசங்கள் வேறு. இதனை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். சுய இன்ப பழக்கம் உடையவருக்கு முடி உதிர்ந்தால், நீங்கள் கட்டாயம் சுய இன்ப பழக்கத்தை குறைக்க வேண்டும். 

தினமும் கட்டாயம் சுய இன்பம் மேற்கொள்ள வேண்டும் என்பதை போல் தோன்றினாலும், சுய இன்பம் மேற்கொள்ளாமல் ஒருநாளை உங்களால் நகர்த்த முடியவில்லை என்றால் சுய இன்பத்தால் நீங்கள் ஆட்கொள்ளப்பட்டுள்ளேர்கள் என்றும் அர்த்தம். சிலர் இரவு வேளைகளில் பலமுறை சுய இன்பம் மேற்கொள்வார்கள். இதுவும் ஆபத்தானதே. 

உடலின் எடை மெலிவது, கண்கள் உள்வாங்குவது போல் இருப்பது, பார்ப்பதற்கே மெலிந்த தேகம் கொண்டு நோயாளி போல காட்சியளித்தாலும் உங்களின் சுய இன்பம் காரணமாக இருக்கலாம். அளவுக்கு அதிகமான சோர்வு உணரப்படும் பட்சத்தில், சுய இன்பத்தால் நாம் ஆட்கொண்டுள்ளது உணர்த்தப்படும். 

சுய இன்பத்தை குறைக்க உங்களின் மன நிலையே உதவி செய்யும். இரவு வேளைகளில் புத்தகங்கள், கதைகள், வரலாறு புத்தகங்கள் படித்து கவனத்தை திருப்புவது, மனதுக்கு இதமான பாடலை கேட்டு மனதை மாற்றுவது, உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக மாற்ற முயற்சிப்பது போன்ற நடவடிக்கைகள் வாயிலாக சுய இன்ப பழக்கத்தை குறைக்கலாம்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to Control and Causes and Solution of Masturbation or Self Enjoy or Hand Shake or Kai Adipathu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->