பெண்களின் பிறப்புறுப்பு தூய்மை பற்றிய விஷயங்கள்.! சந்தேகமும் தீர்வும்.!!  - Seithipunal
Seithipunal


நம்மில் பெரும்பாலானோர் வெளிப்படையான அழகுத்தோற்றத்தை பராமரிப்பதில் தரும் பெரும்பங்கின் ஒரு விழுக்காடு அளவிற்கு கூட பிறப்புறுப்புகளுக்கு தருவதில்லை என்பது தான் நிதர்சனமாக உள்ளது. நாம் நமது பிறப்புறுப்பை பராமரிப்பது என்பது நமது ஆரோக்கியம் சார்ந்த விஷயமும் கூட., ஏனெனில் நமது பிறப்புறுப்பின் மூலமாக பரவும் தொற்றானது நமது உடலில் பெரும்பாலான பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இது குறித்து நமது உற்ற நண்பர்களிடம் கூட கேட்க வெட்கப்படும் நிலையில்., இதனை பற்றிய தகவலை பெரும்பாலானோர் இணையத்தில் படித்து மட்டுமே தெரிந்துகொள்ளும் சூழலில் இருந்து வருகிறோம். அந்த வகையில்., ஆணும் சரி பெண்ணும் சரி பிறப்புறுப்பை பராமரிப்பதில் தனி கவனம் செலுத்திவந்தால் மட்டுமே நமது உடலை பராமரிக்க இயலாது. 

இன்று என்னதான் பலவிதமான மருத்துவ முறையில் மனித உடலில் நடந்த மாற்றத்தை அறிந்து கொண்டாலும்., தற்போது வரை எத்தனை நபருடன் அல்லது எத்தனை முறை தாம்பத்தியம் கொண்டுள்ளோம் என்பதை மருத்துவரால் கூட கூற இயலாது. ஒரு முறை கன்னித்தன்மை இழக்கும் பட்சத்தில்., கன்னித்தன்மையை இழந்த பின்னர் எத்தனை நபருடன் தாம்பத்தியம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அறிவது சிக்கலான விஷயமாகும். அந்த வகையில்., பெண்கள் பலாத்காரத்திற்கு உட்படுத்தும் சமயத்தில்., பெண்ணை எத்தனை நபர்கள் சீரழித்துள்ளனர் என்ற தகவலை பிறப்புறுப்பில் இருக்கும் உள்ளுறுப்புகளின் சேதத்தை வைத்தே கூற இயலும். இதன் காரணமாக பிறப்புறுப்புகளின் அளவுகளில் மாற்றங்கள் ஏற்படுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இயல்பது. பொதுவாக ஆண்கள் எத்தனை முறை தாம்பத்தியம் கொண்டாலும் பிறப்புறுப்பின் அளவு மாறாது. பெண்களுக்கு இது சற்று மாறுபடும். 

பெண்களை பொறுத்த வரையில் அதிகளவிலான தாம்பத்தியம் பிறப்புறுப்பின் அளவை மாற்றாது. இதில் குழந்தை பிரசவிக்கும் நேரத்தில் பிறப்புறுப்பு எவ்வுளவு விரிவடைகிறது என்பதை பொருத்தும் அமையும். பிரசவத்திற்கு பின்னர் பிறப்புறுப்பு தனது பழைய நிலையை அடைந்தாலும்., அதில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். பிறப்புறுப்பில் இருந்து வெறியேறும் மெல்லிய வாசத்தின் மூலமாகவும்., பெண்களின் ஆரோக்கியம் அறிய முடியும். பிறப்புறுப்பில் இருந்து மெல்லிய வாடையானது வெளியேறும் பட்சத்தில்., அது உடலில் ஹார்மோன் மாற்றங்கள் சரிவர நடைபெறுவதை குறிக்கிறது. அதனைப்போன்று பிறப்புறுப்பில் இருந்து திட மற்றும் திரவத்துடன் சேர்ந்து துர்நாற்றம் வீசும் பட்சத்தில்., உடலில் நோய் குறைபாடு அல்லது பிறப்புறுப்பு ஈஸ்ட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தமாகும். 

பிறப்புறுப்பின் நாற்றத்திற்கு பொதுவாக உணவு பழக்கம் காரணமாக இருக்கலாம்? என்று சந்தேகித்தால் பூண்டு போன்ற உணவுகளை சாப்பிடும் நேரத்தில் இந்த மாற்றம் ஏற்படும்.. ஆனால் இது நிரந்தரமானதல்ல.. பொதுவாக தாம்பத்தியத்தின் போது பெண்களுக்கு சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இந்த நிகழ்விற்கு ஆண்களின் பிறப்புறுப்பு பெண்களின் பிறப்புறுப்பில் நுழையும் சமயத்தில்., சிறுநீர் பையில் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக ஏற்படவும்., தாம்பத்திய உச்சத்தை அடையும் சமயத்தில் ஏற்படும் உணர்வாக இருக்கலாம். தாம்பத்தியத்தின் போதே சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும் பட்சத்தில்., பிறப்புறுப்பின் தசைகள் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம். தாம்பத்தியத்தின் போது பெண்ணின் உடலில் ஆணின் பிறப்புறுப்பு நுழையும் பகுதியில் காற்றும் சேர்ந்து நுழைவதன் காரணமாக காற்று குசுவாக இயற்கையாக வெளியேறும். இதனை எண்ணி கவலை கொள்ள தேவையில்லை. 

பெரும்பாலும் பெண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்பட்டுள்ள பருவானது அதிகளவு மன உறுத்தலை ஏற்படுத்தும். பிறப்புறுப்பில் இருக்கும் உரோமங்களை அகற்றும் சமயத்தில் பிறப்புறுப்பு கருப்பு நிறமாக மாறுதல்., பிறப்புறுப்பில் இருக்கும் கரு கருப்பு நிறமாக மாறலாம். இதனை தவிர்ப்பதற்கு இயற்கை முறையில் உரோமங்களை அகற்ற வேண்டும். பெண்களின் மாதவிடாய் சமயங்களில் உடலில் ஏற்படும் ஈஸ்டிரோஜன் அளவின் குறைபாட்டின் காரணமாக பிறப்புறுப்பில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படும். இதனால் ஏதேனும் தொற்றோ என்று பயம் கொள்ள வேண்டாம். பிறப்புறுப்பில் ஏதேனும் சிறிய அளவிலான பொருட்களை உபயோகம் செய்யும் பட்சத்தில்., அது பிறப்புறுப்பில் மாட்டிக்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு ஏதேனும் நிகழும் பட்சத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girls Things about women's genital cleansing


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal