தனிமையில் இனிமை போல, முதுமையிலும் இனிமை காண இயலுமா?...!!
Aged persons also Enjoy with Partner depending upon Health Condition
தாம்பத்திய குறைபாட்டிற்காக வயகரா மாத்திரை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், 40 வயது முதல் 80 வயதில் இருக்கும் நபர்கள் முதுமையான பின்னரும் தாம்பத்தியத்தில் ஈடுபடுவார்கள் என்றும், 90 விழுக்காடு தாம்பத்யம் இப்போதும் தங்களின் வலையில் முக்கிய அங்கமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், ஹாங்காங் மாநகரில் எடுக்கப்பட்ட ஆய்வில் 38 விழுக்காடு முதியவர்கள் தாம்பத்யத்தில் ஈடுபடுவது தெரியவந்தது. இதனைப்போன்று சுமார் 28 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சத்தான ஆகாரம், ஆரோக்கியமும் இருந்தால் தாம்பத்தியம் மேற்கொள்ளலாம் என்றும், வெளிப்படையான விவாதம் இதற்கு தேவை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தாம்பத்திய உணர்வுகள் குறையும் பட்சத்தில் சர்க்கரை நோய், இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கொலஸ்ட்ரால் போன்றவை அதிகரிக்கும் என்றும், தாம்பத்திய குறைபாடு காரணமாக கணவன் - மனைவிக்கு இடையே பரஸ்பர அன்பு என்பது குறையும் என்றும் தெரிவித்துள்ளனர். தாம்பத்திய குறைபாடுகளை நீட்டிக்க விடாமல் இருக்கும் பட்சத்தில், உடலுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்க இயலும்.
ஆங்கில தாம்பத்திய மருந்துகளால் உடலின் எடை கூடுதல், இதய நோய்கள், புற்றுநோய் போன்றவை கூட ஏற்பாடு வாய்ப்புகள் இருக்கிறது என்றும், இதனால் தாம்பத்திய உடலுறவின் போது திறன் மாற்றம் இருக்கும் என்றும் தெரிவிக்கின்ற்னர். யுனானி என்னும் மருத்துவ குறையில் நோயாளியின் உடலுக்கு சக்தி ஏற்படுத்தவும், நோயெதிர்ப்பாற்றலை ஏற்படுத்தவும், நோயை கட்டுப்படுத்தவும் மருந்துகள் தரப்படுகிறது.
நோய்களில் இருந்து விடுபட நினைக்கும் யுனானி மருந்து உட்கொள்ளும் நபர்கள் இளமை துடிப்பு மற்றும் சுறுசுறுப்புடன் இயங்க முடிகிறது. ஏனெனில், இதில் பாதாம் பருப்பு, பிஸ்தா, குங்கும பூ, ஆப்பிள் முறபா மற்றும் அக்ரூட், ஜெல் கோசா போன்ற பழங்கள் மற்றும் மூலிகைகள் சேர்த்து யுனானி மருந்துகள் தயார் செய்யப்படுகிறது. இதனால் யுனானி மருந்துகளை உட்கொள்ளும் நபர்கள் புதிய உடல் சக்தியுடன் நடமாட இயல்கிறது.
பெண்மையை எடுத்துரைக்கும் வகையில் மிளிரும் ஈஸ்டிரோஜெனிற்கு உள்ள அதே பங்கு, ஆண்மையை காப்பதில் டெஸ்டிரோஜெனிற்கு பங்கு இருக்கிறது. டெஸ்டிரோஜன் அளவுகளை இயல்பாக வெறும் மருந்தால் அதிகரிக்க இயலாது. இதனை பாதாம் பருப்பு, பிஸ்தா, அக்ரூட், ஜால்கோஜா, பிண்டக் பருப்பு, பிஸ்து கிஸ்து, அபுல்கிப்பிப், துக்மே கலியூன், துக்மே ஜர்ஜிர், குங்குமப்பூ, குஷக், சிங்காடா, கசகசா, சுக்கு, லவங்கப்பட்டை போன்றவற்றின் மூலமாக அதிகரிக்க இயலும். இதன் மூலமாக முதுமையிலும் இன்பம் எளிதாகும்.
Tamil online news Today News in Tamil
English Summary
Aged persons also Enjoy with Partner depending upon Health Condition