வினோத முறை சம்பவமும்.. வைரலான பதிவும்.. உச்சக்கட்ட எச்சரிக்கை விடும் மருத்துவர்கள்., மனநல ஆலோசகர்கள்.! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஏதேனும் ஒரு விஷயம் பெரும் பேசுபொருளாக மாறி விவாதிக்க வைக்கும். ஊடகங்களில் நேரடி விவாதம் பெற இயலாத சில விஷயங்களும் இதில் இருக்கிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான புகைப்படம் மற்றும் செய்தி குறித்த தகவல் பலரையும் அதிர வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் சிலர் கலாய்ப்பதும், அதற்கான ஆலோசனை சொல்வதும், எதிர்கால தீர்வுகளை சொல்வதும் என பலரும் தங்களுக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். அது என்ன? என்பதை காணலாம். 

முகநூல் பக்கத்தில் B**Daires என்ற ஹாஷ்டேக்கில் ஒரு பெண்மணியின் சந்தேகத்திற்கான புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் தகவல் தெரிவித்துள்ள ஒரு பெண், நான் எனது நண்பருடன் உல்லாசமாக இருந்தேன். எனது ஆண் நண்பர் எனது காதுகளில் உள்ள தோடு அல்லது கம்மல் மட்டும் இடத்தில் துளையை இட்டு, அவரது ஆணுறுப்பை செலுத்தி உல்லாசமாக இருந்தார். இந்த நிகழ்வுக்கு பின்னர், குறித்த இடம் புண்களுடன் காணப்படுகிறது. 

அதனை சுற்றிலும் பொக்களங்கள் போல, மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது. இதுகுறித்து மருத்துவர்களிடம் தெரிவித்து, நான் எப்படி சிகிச்சை பெறுவது?. அவர்கள் தன்னை என்ன நினைப்பார்கள்?. வீட்டிலேயே சிகிச்சை பெற இதற்கு வழிகள் உள்ளனவா?. முட்டாள்த்தனமாக ஏதும் எண்ணவேண்டாம். ஆலோசனை வேண்டும் " என்று பதிவு செய்துள்ளார். இது தொடர்பான பதிவுகள் புகைப்படம் வாயிலாக பெரும் வைரலாகியுள்ளது. 

இந்த பதிவுகளை பார்த்த பலரும் ஆலோசனை கூறினார்களோ இல்லையோ முதலில் சரமாரி விமர்சனங்களை முன்வைக்க தொடங்கிவிட்டனர். அவர்கள் கூறிய விமர்சனங்களில் சில பின்வருமாறு., 

1. திருட்டு செயலின் தீவிரத்தனம். 
2. டோனட் காது போல் தெரிகிறது.
3. W***K அவர் அதை செய்ய வேண்டுமா?.
4. உங்களது நண்பரின் ஆணுறுப்பை அறுத்திடுங்கள். அதுவே நல்லது.. 
5. என்ன எண்ணம் கொண்டவன் அவன்?.. துளை இருக்கும் இடமெல்லாம் துளைத்திடுவானா?. 
6. காம ஆசைகள் இருக்க வேண்டியது தான்.. அது துணையின் உடலை பாதிக்காமல் இருக்க வேண்டும். 
7. தயவு செய்து உங்களின் காதலரை தூக்கி எறியுங்கள்.. இப்படிப்பட்டவர் நாளை அவரின் சுகத்திற்காக எந்த எல்லையும் செல்வார். அது உங்களின் உயிருக்கு ஆபத்து.

இப்படியாக ஆதரவு, எதிர்ப்பு, கலாய் என ஒவ்வொரு கருத்துக்களும் தொடர்ந்து கொண்டே செல்கிறது. இதில் இருந்தும் நாம் அறிய வேண்டியது என்ன? என்பதே அடுத்த கட்டமாக இருக்கிறது. அதைப்போல நாமும் முயற்சித்து பார்ப்போம் என்று களமிறங்கினால் கட்டாயம் கொலை முயற்சி வழக்கில் நீங்கள் கைதாக வேண்டியிருக்கும் என்பதே விபரம் அறிந்தவர்களின் கூற்று. இதுகுறித்து கலவிக்கான மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகரிடம் இதுபோன்ற வினோத பாலியல் ஆசைகள், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து கேட்கப்பட்டது. 

அவர்கள் தெரிவிக்கையில், தாம்பத்தியத்தை பொறுத்த வரையில் தம்பதிகளின் உச்சக்கட்டம் பெற முயற்சிக்கும் நிலைகள் அல்லது எடுக்கப்படும் நடவடிக்கைகள் தவறில்லை என்ற ஒற்றை கூற்றினை மட்டும் அனைவரும் நினைவில் கொள்கின்றனர். ஆனால், அதற்கு அடுத்துள்ள " தனது துணையின் உடல் பாதிக்கப்படக்கூடாது " என்பதை நினைவில் கொள்வதில்லை. இதனால் ஏற்படும் துயரங்கள் அது. சிலர் தங்களின் பாலியல் இச்சைக்காக பெண்களை அடித்து துன்புறுத்தி இன்பமடைகின்றனர். சிலர் இதுபோன்ற வினோத செயல்களை செய்கின்றனர். இவை உடல் நலத்திற்கு கட்டாயம் ஆபத்தை கொண்டு வரும். 

முதலில் தம்பதிகளோ, காதலர்களோ யாராக இருந்தாலும் இதுபோன்ற வினோத முயற்சிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கூட தாம்பத்தியத்தின் போது ஆணுறை இல்லை என்று பசையை தடவி ஆணொருவர் செய்த விபரீதம் அவரது உயிரை பறித்தது. தாம்பத்தியம் என்பது தம்பதிகள் மனதளவில் கலந்து கொண்டாட வேண்டிய விஷயமே தவிர்த்து, இதுபோன்று ஒரு துணையின் ஆசைக்காக மற்றொரு துணையை வற்புறுத்தி செய்யவைத்து, அவரது உடல் நிலையை மோசமாக்குவது கிடையாது. முந்தைய காலங்களில் இதுபேன்ற வினோத தாம்பத்திய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. 

ஆனால், இன்றோ கைகளில் செல்பேசிகளை வைத்துக்கொண்டு, அதில் வரும் ஆபாச படங்களில் இருக்கும் பல நிலைகள் தான் உண்மையான தாம்பத்திய நிலைகள் என்று எண்ணி மடைமாற்றி செயல்படுகின்றனர். உலகம் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியை கண்டாலும், தாம்பத்திய விஷயத்தில் அதன் வளர்ச்சி பல விபரீதங்களை பெருமளவு கொண்டு வந்து சேர்த்துள்ளது. ஆபாச படங்கள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டு, அதற்காக பெண்கள் அல்லது ஆண்கள் உடலில் அறுவை சிகிச்சை செய்து, அல்லது போலியான பொம்மை போன்று இருக்கும் ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு போன்றவற்றை மாற்றி படமாக்கப்படும் காட்சிகள். இதனை பார்த்து தங்களின் துணையை வற்புறுத்துவது அவரது உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். 

இதுபோன்று ஒருமுறை பெண்ணுக்கு தாம்பத்தியத்தில் வெறுப்பு அல்லது விரக்தி ஏற்படும் பட்சத்தில், அடுத்தமுறை பெண்ணுக்கு பயத்தை ஏற்படுத்திவிடும். தாம்பத்தியத்தில் தம்பதிகளின் பாசம், அன்பு, காதல், முதற்கட்ட விளையாட்டுகள் போன்றவை மூலமாக பெண்ணுறுப்பில் தாம்பத்தியத்தின் போது ஏற்படும் உராய்வை குறைக்க திரவம் சுரக்கும். தாம்பத்திய புணர்ச்சியின் போது பெண்ணுக்கு வலி குறையும். எளிதில் உச்சக்ட்டமும் கிடைக்கும். மாறாக தன்னாசை பெரிது என்று நினைத்து செயல்பட்டால், பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டு, பின்னாளில் அது தாம்பத்திய வெறுப்பை கட்டாயம் ஏற்படும். ஒரு விஷயத்தை வெறுக்கவும், விரும்பவும் வெறும் 3 வாரங்கள் முதல் 3 மாதங்கள் போதுமானது. 

தாம்பத்திய விஷயத்திலும் அப்படி தான். நாம் செய்யும் செய்யலை பொறுத்தே அனைத்தும் கைகூடும். இன்றுள்ள இளம் தலைமுறை தங்களுக்கு தாம்பத்திய விஷயங்களில் உள்ள சந்தேகத்தை பெரும்பாலும் நட்பு வட்டாரங்களில் கேட்டு தெரிந்துகொள்கிறது. அல்லது இணையத்தில் படித்தும், திருட்டுத்தனமான ஆபாச வீடியோ பார்த்தும் தெரிந்துகொள்கிறது. எதோ விவகாரம் ஆகிவிட்டால் மருத்துவரை நாடுகின்றனர். சரி தாம்பத்தியத்தில் சந்தேகத்தை தீர்க்கும் அந்த நண்பர் சரியான தகவலை கூறினாலும் பரவாயில்லை. அவர் தான் பார்த்த, படித்த விஷயத்தில் உள்ளதை தனது கற்பனைக்கேற்ப கூறுகிறார். இதனால் பெரும்பாலான பின்விளைவுகள் பிரச்சனை ஏற்பட்ட பின்னரே தெரியவருகிறது. மேற்கூறிய விஷயத்தை போல பல விஷயங்கள் நடந்திருக்கும். ஆனால், அதில் சில மட்டுமே தெரியவருகிறது. பல மறைக்கப்படுகிறது. 

தவறுகளில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்ளும் எண்ணம் வர வேண்டும். மாற்றாக அதே தவறினை செய்து பார்த்து அனுபவத்தை கற்றுக்கொள்ள நினைக்க கூடாது. மேற்கூறிய விஷயத்தில் இருந்து பலரும் அந்த தவறை செய்யாமல் இருப்பது நலம். மாறாக அதனை செய்து பார்க்க நினைத்து விபரீதம் ஆனால், சொந்த மனைவி அல்லது காதலி கொடுக்கும் புகாரில் கைதாக நேரிடும் " என்று தெரிவிக்கின்றனர். 

இங்கு தீர்வுகள் மருத்துவரிடம் கேட்பதற்கு பதிலாக எதற்காக பெண் பொதுவெளியில் வெளியிட்டார் என தெரியவில்லை. ஆணாகினும் சரி, பெண்ணாகினும் சரி விபரீதம் உங்களை விபரீதத்திற்கு அழைத்து செல்லும் என்பதை மறவாதீர்கள். சிந்தித்து செயல்படுவது சாலச்சிறந்தது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Man Drive Penis on Girl Friend Ear She Ask Solution to Problem What is the Real fact


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->