40 மேற்பட்ட குழந்தைகளை காவு வாங்கிய சவுதி கூட்டுப்படையினரின் கொடூர தாக்குதல்..!  - Seithipunal
Seithipunal


ஏமன் நாட்டில் அந்த நட்டு அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டு வருடங்களாக ஆயுத போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை அவர்களின்  கட்டுப்பாட்டுக்குள் வைத்து அப்பகுதிகளை பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.

சர்வதேச அளவில் ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசாங்கத்துக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து உள்ளனர். அவர்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.

இதற்கிடையே, ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுதி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தியதில், பள்ளி பேருந்தில் சென்ற 12 குழந்தைகள் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தது  

இந்நிலையில், சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தியதில், பள்ளி பேருந்தில் பயணம் செய்த 40  மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏமன் உள்நாட்டு போரில் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

yeman country air force attack


கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...
Seithipunal