இலக்கை முடிக்காத ஊழியர்களை, சிறுநீரை குடிக்கவைக்கும் நிறுவனம்! தொழிலாளருக்கு நடக்கும் அவலம்! - Seithipunal
Seithipunal


சீனாவில் இயங்கும் தனியார் நிறுவனம் ஒன்று, வேலையை முழுமையாக முடிக்காத ஊழியர்களை சிறுநீர் குடிக்க வைத்தும், கரப்பான்பூச்சிகளை சாப்பிட வைத்தும், சாட்டையால் அடித்தும் கொடுமைப்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. 

பெய்ஜிங் மாகாணத்தை தலைமை இடமாக கொண்டு, வீடுகளை சீரமைக்கும் நிறுவனம் ஒன்று இயங்கிவருகிறது, அங்கு தொழிலாளர்களை பல்வேறு வகையில் கொடுமைப்படுத்துவதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது. 

குயிஜாவூ மாகாணத்தின் இயங்கும் ஊடகம் ஒன்று, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து செய்தி வெளியிட்டது. அதில் அந்த நிறுவனம் தொழிலாளர்கள் கொடுமைப்படுத்துவது, சார்ந்த விஷயங்கள் வெளிவந்துள்ளன. 

அவர்கள் வைத்துள்ள இலக்கை முடிக்க முடியாத, ஊழியர்கள் கழிவறைக்கு சென்று, அங்கு யூரினல்லிருந்து நேரடியாக சிறுநீரை குடிக்க வேண்டும். மேலும், கரப்பான்பூச்சிகளை பச்சையாக பிடித்து சாப்பிட வேண்டும். மேலும், சம்பளத்தை தராமல் இழுத்தடிப்பது மற்றும் தலையை மொட்டை அடிப்பது போன்ற கொடுமைகளும் அங்கு நடந்துவந்துள்ளன.

இதுதவிர, லெதர் காலணிகளை அணியாத தொழிலாளர்களுக்கு 50 யுவான் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இது தொடர்பான நடவடிக்கைகள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது அந்த நிறுவனம் மீதான புகார்கள் அடங்கிய ஆதாரங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. 

பெய்ஜிங் மாகாண காவல் துறையினர், இந்த நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து, தொழிலாளர்களை கொடுமைப்படுத்திய 3 மேலாளர்களை சிறையில் அடைத்துள்ளது. விரைவில் அவர்களுக்கு மாநில அரசாங்கம் தண்டனை உறுதிசெய்யும் என்று கூறியுள்ளனர்.
 

English Summary

workers drink in urine

செய்திகள்Seithipunal