மிரட்டிய அமெரிக்கா! பணிந்து போன வடகொரியா! வாழ்த்து சொன்ன உலக நாடுகள்! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாடு பல முறை எச்சரிக்கை தெரிவித்தும் வட கொரியா அதை ஏற்காமல், இந்த அணு ஆயுத சோதனையின் மூலம் வட கொரியா தனது அண்டை நாடான ஜப்பான் மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்திவந்தது. எதிர்ப்பை மீறி, தொடர்ந்து அணுஆயுத சோதனை நடத்திவந்தது. இதனால் வட தென் கொரியா இடையே  பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் கோவம் அடைந்த அமெரிக்கா, வட கொரியா மீது பொருளாதாரத் தடை விதித்தது.


இந்த உத்தரவால் சில நாட்களாக, வட கொரியாவில் தற்போது அமைதியான சூழல் உருவாகி உள்ளது.  இன்னும் சில வாரங்களில் முதல் முறையாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் நேரில் சந்திக்க உள்ளனர்.

இந்நிலையில், வடகொரியா அதிபர் ஒரு அதிரடி முடிவுக்கு அறிவித்துள்ளார். ''இனி வடகொரியா அணுஆயுத சோதனை நடத்தப்போவதில்லை'' என முடிவெடுத்து அறிவித்துள்ளார்.மேலும் இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களில், ஏப்ரல் 21-ம் தேதி முதல் அணுஆயுத சோதனை மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனை நிறுத்தப்படும். கொரிய தீபகற்பத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைதியை மையமாகவைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வடகொரிய அதிபரின் இந்த முடிவுக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் வரவேற்பு அளித்து வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.  “வட கொரியாவின் இந்த முடிவு, அந்நாட்டுக்கும் ஒட்டு மொத்த உலகத்துக்கும் ஓர் நற்செய்தி. இது பெரும் முன்னேற்றம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்ற நாடுகளும் வட கொரியாவின் இந்த முடிவுக்கு வரவேற்பு அளித்து வாழ்த்தும் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

USA VS North Korea NO MORE ISSUE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->