முதல் சோதனையிலே வெற்றி பெற்ற இந்தியா! ஆச்சரியத்தில் அமெரிக்க வெளியிட்ட அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி நேற்று அவசர அவசரமாக நாட்டு மக்களிடம் உரையாற்ற இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியது. இதனை தொடர்ந்து தற்போது நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி, " இந்தியா மிகப்பெரிய சாதனையை விண்வெளித்துறையில் நிகழ்த்தியுள்ளது.

மேலும், செயற்கை கோள் ஒன்றை விண்ணில் சுட்டு வீழ்த்தும் சோதனையிலும் வெற்றி அடைந்துள்ளது. இந்தியாவின் செயற்கைக் கோளை பாதுகாக்கும் முயற்சி தானே தவிர பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அது அல்ல.

விண்ணிலேயே செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும்,மிஷின் சக்தி என்ற சோதனை வெற்றிகரமாக தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் உலகின் 4வது சக்தி மிகுந்த நாடு இந்தியா ஆகும். நாம் சொந்த செயற்கை கொலை தான் சுட்டு வீழ்த்தி உள்ளோம்" என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இந்நிலையில், மிஷன் சக்தி சோதனையை வெற்றிகரமாக இந்தியா நடத்தி முடித்தது பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியவை,

மிஷன் சக்தி சோதனை தொடர்பாக பிரதமர் மோடியின் அறிக்கையை நாங்கள் பார்த்தோம். விண்வெளி பாதுகாப்பு, ஆராய்ச்சியில் இந்தியாவுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடரும். அதேசமயம், செயற்கைகோள்களால் விண்வெளியில் ஏற்படும் குப்பைகள் கவலை அளிப்பதாக இருக்கிறது. விண்வெளி குப்பைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த சோதனை வடிவமைக்கப்பட்டதாக கூறிய இந்தியாவின் அறிக்கைகளை கவனத்தில் கொண்டுள்ளோம் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

usa takes note on drdo mission


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->