டிரம்ப்புக்கு நெருக்கடி...அரசு அலுவலகங்கள் மூடல் : ஒட்டு மொத்தமாக முடங்கிப்போன அமெரிக்கா! - Seithipunal
Seithipunal


டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்த நாளில் அமெரிக்க அரசு துறைகள் முடங்கியுள்ளன. அரசுத் துறைகள் இயங்குவதற்கான நிதியை வழங்கும் இடைக்கால மசோதா செனட் அவையில் நிறைவேறாததால், இந்த அசாதாரண சூழல் அங்கு உருவாகியுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 7 லட்சம் பேரை வெறியேற்றும் விவகாரத்தில், அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு  முன்வராததால், அரசு செலவினங்களுக்கான நிதி மசோதாவை செனட்டில் எதிர்க்கட்சி தோற்கடித்தது. இதனால் அங்கு அரசு அலுவலகங்கள் நேற்று  முதல் மூடப்பட்டன. 

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு,  குடியேற்ற சீர்திருத்திருந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 7 லட்சம் பேர் வெளியேற்றப்படுவர் எனத் தெரிகிறது. 

இந்த விவகாரம் தொடர்பாக  தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால், இதற்கு அதிபர் டிரம்ப் மறுத்து  விட்டார். எனவே, அதிபர் டிரம்ப்பை வழிக்கு கொண்டு வரும் ஆலோசனையில் எதிர்க்கட்சி மும்முரமாக ஈடுபட்டது. 

இந்நிலையில் அமெரிக்க  அரசின் செலவுக்காக வரும் பிப்ரவரி 16ம் தேதி வரையிலான குறுகிய கால நிதி மசோதா நாடாளுமன்றத்தின் ஒட்டெடுப்புக்கு  வந்தது. பிரதிநிதிகள் சபையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால், அங்கு மசோதா நிறைவேறியது. செனட் சபையில் நேற்று முன்தினம் இரவு  வாக்கெடுப்பு நடந்தது. இதில் அதிபர் டிரம்ப்பை பழிவாங்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.  

செனட் சபையில் நிதி மசோதாவுக்கு ஒப்புதல்  பெற 60 ஓட்டுக்கள் தேவை. ஆனால் நேற்று முன்தினம் நடந்த வாக்கெடுப்பில் நிதி மசோதாவுக்கு  ஆதரவாக 48  ஓட்டுகளும், எதிராக 50 ஓட்டுகளும் விழுந்தன. இதனால் குறுகியக்கால நிதி  மசோதா தோல்வியடைந்தது. 

இதையடுத்து நேற்று முதல்  அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன.  8 லட்சம் அரசு ஊழியர்கள்  அலுவலகத்துக்கு வரவில்லை.  ராணுவம், போலீஸ், தீயணைப்புத்துறை,  விமான நிலையம், அஞ்சல் துறை போன்ற  அத்தியாவசிய துறைகளில் மட்டும் ஊழியர்கள் சம்பளம் பெறாமல் பணியாற்ற  வேண்டும்.

அமெரிக்க  அதிபராக டிரம்ப் பதவி ஏற்று ஓராண்டுக்குப்பின் அரசு பணிகள்  முடக்கப்பட்டுள்ளன. இதற்கு ஜனநாயக கட்சியினர் மீது அதிபர் டிரம்ப்  குற்றம்  சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US govt shuts down as trump feuds with democrats


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->