ஆப்கானிஸ்தானில் சுதந்திரமாக செயல்படும் பயங்கரவாத இயக்கங்கள்..! ஐ.நா தகவல்..! - Seithipunal
Seithipunal


தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதற்கு தலிபான்கள் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளிப்பதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் சுதந்திரமாக செயல்படுவதாகவும், அவர்களால் அண்டை நாடுகளுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா வின் தலிபான் கண்காணிப்பு குழு வெளியிட்ட அறிக்கையில், தலிபான் ஆட்சியை கைப்பற்றிய போது பிற நாடுகளுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானை பயன்படுத்த மாட்டோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது பாகிஸ்தான் தலிபான் எனப்படும் தெஹ்ரீக்- ஏ-தலிபான் பயங்கரவாத அமைப்புக்கு தலிபான்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து அல்கொய்தா மற்றும் இதர பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆப்கானிஸ்தான் மறைவிடமாக அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவுடன் செய்யப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் படி தலிபான்கள் எந்தவித தாக்குதலில் ஈடுபடவில்லை என்றாலும், பயங்கரவாத இயக்கங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதி அளித்து வருவதாக ஐ.நா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

இதனிடையே ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் பிரிவான ஐ.எஸ்.ஐ.எல்.கே அமைப்பை எதிர்கொள்ள ஐ.நா உறுப்பு நாடுகளிடம் உதவி கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Un report says Terrorists freedom is concern in Afghanistan


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->