தியாகத்தின் மொத்த உருவத்தை போற்றுவோம்.! - Seithipunal
Seithipunal


இன்று தந்தையர் தினம்! தந்தையரை போற்றுவோம்

நம் கலாச்சாரத்தின் படி மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் முறைப்படியே எப்போதும் வணங்கி வந்திருக்கிறோம்.தந்தையர் தினமானது ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தின் 3 ஆவது  ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது.

மாதா, பிதா, குரு, தெய்வம் என நாம் வணங்குவதற்குரியவர்களாக வரிசைப்படுத்தி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். இந்த உலகில் முதலில் நாம் தோன்ற காரணமானவர் அம்மா தான். அவர் தான் நமக்கு முதற்கடவுள். அன்னையை அடுத்து தந்தை தான். அவர் தான் தியாகத்தின் மறு பெயர். 

தந்தை இல்லாமல் இந்த உலகத்திற்கு நாம் வர முடியாது. எனவே மாதா, பிதா இந்த இருவரும் நாம் இந்த மண்ணில் பிறப்பதற்கு காரணமாய் இருப்பவர்கள். ஆனால் நாம் இருக்கும் நிலை தாண்டி, அடுத்த நிலைக்கு செல்ல தான் நமக்கு குரு மற்றும் தெய்வத்தின் துணை தேவைப்படுகிறது.  

உலகம் முழுவதும் தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  அன்னையர் தினம் கொண்டாடப்படுவது போல், தந்தையர் தினமும் கொண்டாடப்படுகிறது. சிறு வயதில் இருந்து நம்மை வளர்த்தெடுக்க அம்மாவுக்கு சமமான பங்கு தந்தைக்கும் உள்ளது. தந்தையை கெளரவிப்பதற்காக  உலக முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

உலகின் மொத்தம் 52 நாடுகளில் தந்தையர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தையர் தினத்தன்று பிள்ளைகள் காலையில் எழுந்து குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வணங்கிய பின் வீட்டிற்கு வந்து தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவார்கள்.

ஒரு தந்தை என்பவர் தன் பிள்ளைகளுக்காக  தன்னுடைய மகிழ்ச்சியில் தொடங்கி வாழ்க்கை முழுவதும் பிள்ளைகளுக்காகவும், குடும்பத்திற்க்காகவும்  விட்டு கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள். இப்படிபட்ட தியாகம் நிறைந்தவர்களை கவுரவிக்க ஒரு நாள். அது தான் தந்தையர் தினம்.

வருடம் முழுவதும் குடும்பத்திக்காக உழைக்கும்  தந்தையை சிறப்பிக்க  இந்த நாள் பிள்ளைகளால் கொண்டாடப்பட வேண்டும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் தந்தை ஒரு இடமும், பிள்ளைகள் வேறு இடத்திலும் பிரிந்து வாழ்கின்றனர். தந்தையை நேரில் சென்று அவரிடம் ஆசிர்வாதம் பெற்று, மகிழ்ச்சியோடு தந்தையுடன்  நேரத்தை செலவிட வேண்டும்.

ஆனால் தற்போதைய கலாச்சார மாற்றத்தால் பிள்ளைகள் தன் தந்தைக்கு கைபேசி வாயிலாக கூட வாழ்த்துக்கள் தெரிவிப்பதில்லை. ஆனால் சமூக ஊடகங்களில் மட்டுமே  வாழ்த்துக்களை பதிவு செய்கின்றனர்.

ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தன் தந்தை தான் ஹிரோ. சிறு வயதில் இருந்து தன் தந்தையே பின்பற்றி வளருவான் பிள்ளை. சிறுவயது வரை தந்தையை ஹீரோ ஆகவும் பின் தோல் அளவுக்கு வளர்ந்த பின் நண்பனாக மாறிவிடுகிறது தந்தைக்கும், மகனுக்கும் உள்ள உறவு.   

தன் தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய கடமையை வள்ளுவர் அழகாக இரண்டிகளில் சொல்லி இருப்பார். அதாவது, தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே ஆகும். 

"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்" 

என்று வள்ளுவனின் வாக்குகேற்ப நாம் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.   

தன் பிள்ளையின் சிரிப்பு, கண்ணீர், மகிழ்ச்சி என அனைத்துத் தருணங்களிலும் பங்கெடுத்துக் கொள்பவர்தான் தந்தை. இன்று தந்தையர் தினத்தில், உங்கள் தந்தையின் தியாகங்களையும், அவர் பட்ட கஷ்டங்களையும் எண்ணிப் பாருங்கள். அவருக்கு மரியாதை செய்யுங்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Fathers Day Wishes


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->