ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் 3 தலைவர்கள் கொல்லப்பட்டனர்.! ஈராக் படையினர் அதிரடி.! - Seithipunal
Seithipunal


ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கடந்த டிசம்பர் மாதம் போரிட்டு அவர்களை முற்றிலுமாய் அழித்து விட்டதாக அந்த நாட்டின் பிரதமராக இருந்த அல் அபாதி அறிவித்தார். இதே போன்று அங்கு தியாலா மாகாணம், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து முழுமையாக மீட்கப்பட்டு விட்டதாக ஈராக் படைகள் 2014-ம் ஆண்டே அறிவித்திருந்தன.
 
ஆனால் அவ்வாறு ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கு முழுமையாக அழிக்கப்பட்டு விடவில்லை. கடந்த சில மாதங்களாக அங்கு ஜலாவ்லா, சாதியாக், முக்ததியாக் பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும், உள்நாட்டுப்படைகளுக்கும் இடையே நடந்து வருகிற மோதல்களே இதற்கு உதாரணமாக திகழ்கிறது.

இந்த நிலையில் அங்கு பக்குபா நகரில் இருந்து 75 கி.மீ.தூரத்தில் இருக்கும் மலைப்பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிக பதுங்கி இருப்பதாக ஈராக் படைகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் ஈராக் படையினர் அங்கு முற்றுகையிட்டு அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் உள்ளூர் தலைவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இதில் படை வீரர் ஒருவர் பலத்த காயமடைந்தார் அடைந்தார்.

English Summary

three terrorist leader killed in irak

செய்திகள்Seithipunal