பார்த்து பார்த்து வளத்தினாங்க... உலகின் கடைசி உயிரினமும் உயிரிழப்பு: உலகம் எதிர்கொள்ள இருக்கும் அச்சுறுத்தல்..? - Seithipunal
Seithipunal


உலகின் அரிய வகை உயிரனங்களில் ஒன்றான நார்தன் வெள்ளை நிற ஆண் காண்டாமிருகம் உயிரிழந்துள்ளது.

கென்யா நாட்டில் உள்ள ஒரு சரணாலயத்தில்  பாதுகாக்கப்பட்டு வந்த கடைசி நார்தன் வெள்ளை நிற ஆண் காண்டாமிருகம்  பல கட்ட கவனிப்புகளையும் தாண்டி உயிழந்து விட்டது.

45 வயதான இந்த காண்டாமிருகத்திற்கு சூடான் என்று பெயரிடப்பட்டிருந்தது. ஒல் பேஜட்ட (Ol Pejeta) வனவிலங்கு சரணாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், வலது பின்னங்காலில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டது.

அது குணமடையாத நிலையில், அந்த காண்டாமிருகத்திற்கு வயது முதிர்வு காரணமான பல உடல் உபாதைகள் தொல்லை தந்துகொண்டே இருந்துள்ளது. மேலும் தசை மற்றும் எலும்புகள் மோசமான அளவில் பாதிக்கப்பட்டிருந்தன.

கடந்த மாதம்  அதன் நிலைமை மிக மோசமாகியது. எழுந்து கூட நிற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் சூடான் உயிரிழந்தது. சுடான் இரண்டு வெள்ளை பெண் காண்டாமிருகங்களான நஜின், பட்டு ஆகியோருடன் வசிந்து வந்தது.

இந்த நிலையில் சுடான் உயிரிழந்துள்ளதால் அந்த இனத்தில் இரண்டு பெண் காண்டா மிருகங்கள் மட்டுமே தற்போது உலகில் உள்ளன.

இதுவரையில் பல்வேறு உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்து விட்ட நிலையில், இதே நிலை தொடர்ந்தால் உயிரின சமநிலை தன்மை சிதைந்து உலகம் கடும் பேரிடர் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் என்று இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The world's last marten white male rhinoceros die


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->