உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ! - Seithipunal
Seithipunal


பனிப்பாறைகள் அடங்கிய மிகப்பெரிய கண்டம் அண்டார்டிகா. இங்கு பல பாறைகள் கடலிலே மிதக்கின்றன. அவற்றில் மிகப்பெரிய ராட்சத பனிப்பாறை ஒன்று பிரான்ஸ் நாட்டின் அளவுக்கு  உள்ளது. தற்போது அந்த பாறை உருக ஆரம்பித்துள்ளது. இது ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 


பனிப்பாறைகள் உருகுவது என்பது இயற்கையான ஒன்று தான். ஏனெனில் உலக வெப்பமயவாதலினால் பனிப்பாறைகள் உருகுவது எப்போதும் நடந்து கொண்டு தான் உள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாகவும் பனிப்பாறைகள் உருகும். 


‘நாசா’  ஆய்வு  மையம் இதுகுறித்து 2002 முதல் 2016-ம் ஆண்டு வரை ஆராய்ச்சி செய்தது. அப்போது பனிக்கட்டிகள் உருகுவதால் 25 ஜிகா டன் ஐஸ் கட்டிகள் அண்டார்டிகாவில் வருடந்தோறும் உருகுகிறது என்பது தெரிய வந்தது.  ஆனால் இதனால் ஆண்டுக்கு உலக அளவில் 0.35 மில்லி மீட்டர்  அளவுக்கு மட்டுமே கடல்நீர் மட்டம் உயருகிறது எனவும் கண்டுபிடித்தது.

ஆனால் இந்த பிரான்ஸ் நாடு அளவு உள்ள பாறை உருகினால் கடலின் நீர்மட்டம் 9.8 அடி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல  நாடுகள், தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பாறை உருகி கொண்டே பல நூறு மைல்களை தாண்டி மிதந்து வருவது குறிப்பிடத்தக்கது. உலகம் வெப்பமாவதை தடுக்க என்ன வழியோ!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the world will face big challenge , melting the snow


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->