நீண்டநேரம் செல்போன் பயன்படுத்தினால் வரும் ஆபத்து.! - Seithipunal
Seithipunal


சீனாவில் பெண் ஒருவர், அலுவலக பணிகாரணமாக இரவு தூங்கிய நேரம் தவிர பிற நேரங்களில் எல்லாம் தொடர்ந்து ஒரு வாரம்  செல்போன் உபயோகப் படுத்தியிருக்கிறார். பின்னர், அந்த பெண் தன்னுடைய அலுவலக பணி முடிந்து விடுப்பு எடுத்து வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த பெண் வீட்டிற்கு சென்று சில மணி நேரத்திலேயே அவருடைய கையில் திடீரென வலி ஏற்பட்டது.

பின்னர், சிறிது நேரத்தில் அவருடைய கை செல்போனை பிடித்திருக்கும்பொழுது கையை எவ்வாறு வைத்திருந்தாரோ அது போலவே மாறி செயலிழந்து போனது. இதனால் அவர் பெரும் அதிர்ச்சியடைந்தார்.
 
இதனை அடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்தனர். சிகிச்சைக்குப்பிறகு அவருடைய கை மீண்டும் இயல்பாக மாறியது. இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில் அவருக்கு டெனோசினோவிடிஸ் (tenosynovitis) என்ற நோய் இருப்பதாக தெரிவித்தனர். மேலும்,  பல மணி நேரம் தொடர்ந்து ஒரே வேலையில் ஈடுபடுவதால் இதுபோன்ற நோய் பாதிப்பு ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

English Summary

The risk of using longe time cellphone

செய்திகள்Seithipunal