குட்டி தீவில் தடையை மீறி பிறந்த குழந்தை..!! கொண்டாடி மகிழும் அத்தீவின் மக்கள்..!!! - Seithipunal
Seithipunal


பிரேசில் நாடில் பெர்னான்டோ டி நொரோன்கா என்ற தீவு உள்ளது. அது நடால் நகரில் இருந்து 370 கி.மீட்டர் தொலைவில் இருக்கிறது.

மிகவும் ஒதுக்குப்புறமாக உள்ள இந்த தீவில் 3 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இங்கு மருத்துவமனை உள்ளது. ஆனால் பிரசவ வார்டு மட்டும் இல்லை. ஏனெனில் குழந்தை பெற தடை விதிக்கப்பட்டது.

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அங்கு எந்த பெண்ணும் குழந்தை பெறுவதில்லை என தெரியவந்து.

இந்த நிலையில் 12 ஆண்டுக்கு பிறகு இந்த தீவில் ஒரு பெண்குழந்தை பிறந்தது. அந்த பெண்ணுக்கு 22 வயது இருக்கும். அவர் தனது பெயரை வெளியில் சொல்ல விரும்பவில்லை.

அவருக்கு குழந்தை பிறப்பு என்றால் என்ன என்று தெரியாத நிலையில் இருந்துள்ளார். வீட்டில் இருந்த போது திடீரென பிரசவ வலி ஏற்படவே பாத்ரூம் சென்ற அவர் அலறினார். உடனே அங்கு ஓடிச்சென்ற கணவர் அவருக்கு பிரசவம் பார்த்தார். பின்னர் அப்பெண்ணும், குழந்தையும் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டனர்.

பல ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் தீவில் பிறந்த குழந்தையை அங்குள்ள மக்கள் கொஞ்சி மகிழ்கின்றனர். துணிகள் உள்ளிட்ட பொருட்கள் கொடுத்து அக்குடும்பத்துக்கு உதவியுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the baby birth day in Island


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->