உலகமே புறக்கணித்தாலும்... விடுதலை புலிகளுக்கு உலகமே வியக்கும்படி ஒரு தீர்ப்பை வழங்கிய சுவிட்ச் நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் வாழும் சிங்களர்கள், காலம் காலமாக  வாழ்ந்து வந்த தமிழர்களை கொடுமைப்படுத்தியும், அடிமைப்படுத்தியும் வந்தார்கள். தமிழர்கள் தங்கள் நிலங்களையும் உடைமைகளையும் சிங்களர்கள் பறித்துக்கொண்டனர்.  சிங்களர்கள் தமிழ் பெண்களை மானபங்கம் படுத்தி கொடுமை செய்தனர். தங்கள் மக்களுக்கு நாட்டுக்கு அநீதியை கண்டு பொங்கி எழுந்தார் தலைவன் பிரபாகரன். 

இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காக ‘தமிழீழம்’  அமைய வேண்டும் என்பதற்காக  தனி நாடு கேட்டு விடுதலைப்புலிகள் இயக்கம் போராடி வந்தது. அதன் தலைவராக பிரபாகரன் இருந்தார். முதலில் அற வழியில் போராடிய பிரபாகரன் தன் நாட்டு மக்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடும் சூழ்நிலை ஏற்பட்டது. 

இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே 27 ஆண்டுகள் போர் நடைபெற்றது. இறுதியாக கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை  துப்பாக்கி குண்டுகளாலும், ஆயுதங்களாலும் இலங்கை இராணுவம் தாக்கியது. அந்த போரின் முடிவில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தெரிவித்தது. 

இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்ததாக கூறி 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பெலின்சோனா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அதில் விடுதலை புலிகளின் இயக்கம் பல்வேறு குற்றங்கள் செய்துள்ளதாக அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டது. 

இதைவிசாரித்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  அதில் இலங்கையிலும் மற்றும்  வெளிநாடுகளிலும் விடுதலைப்புலிகள் எந்த ஒரு குற்ற செயல்களில் ஈடுபடவில்லை. அது ‘தீவிரவாத அமைப்பு இல்லை’ என கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த வழக்கை தள்ளுபடி செய்து கைது செய்தவர்களை விடுவித்து சுவிட்சர்லாந்து கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு தமிழர்களிடையே பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Switzerland Court New Judgement LTTE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->