தாய் தந்தையை இழந்த நான்கு சென்னை சிறுவர்களுக்கு உலக கோப்பையில் வாய்ப்பு!! - Seithipunal
Seithipunal


ஐபில் போட்டியின் 12 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் போட்டி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ள நிலையில், தெருக் கிரிக்கெட் உலகக் கோப்பை ஒன்று லண்டனில் நடைபெறவுள்ளது.

நாம் அனைவரும் தெருகிரிகெட்டை சந்தித்துதான் வந்திருப்போம். பெரிய மைதானம் கிடைக்காத சூழலில் தங்களுக்கு என்று விதிகளை வகுத்துக் கொண்டு ஆடும் விளையாட்டு தான் தெரு கிரிக்கெட். அந்த வகையில் லண்டனில் நடத்தப்படும் தெருக் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கு சென்னையில் இருந்து 4 சிறுவர்கள் தேர்வாகியுள்ளனர்.

இவர்கள் நான்கு பேரும் வடசென்னையில் உள்ள கருணாலயா பொது சேவை மையத்தை சேர்ந்தவர்கள். இவர்களுடன் மும்பையை சேர்ந்த 4 சிறுவர்கள் சேர்ந்து 8 பேர் கொண்ட ஒரே அணியாக லண்டன் செல்லவுள்ளனர்.

இந்த தெருக் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நேபாளம் உட்பட 9 நாடுகளைச் சேர்ந்த 10 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. இந்தியாவிலிருந்து தென் இந்தியா, வட இந்தியா என இரு அணிகள் பங்கேற்க உள்ளது. 

இந்த தெருக் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் சென்னையைச் சேர்ந்த அந்த நான்கு சிறுவர்களும் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்து மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் இவர்கள் வடசென்னையில் உள்ள கருணாலயா பொது சேவை மையத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

street cricket world cup


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->