கோழி முட்டையிடுவது போல... குன்று முட்டையிடும் அதிசயம்..! - Seithipunal
Seithipunal


சீனாவின் கைசொவ் மாகாணத்தில் அமைந்துள்ளது சான் டா யா குன்று. 9 அடி உயரமும் 65 அடி நீளமும் கொண்ட இக்குன்று கல் முட்டைகளை இடுவதாக அங்குள்ள கிராம மக்கள் கூறுகின்றனர்.

30 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த குன்றிலிருந்து கல் முட்டைகள் வெளிவருவதாகவும், இதன் முட்டைகள் சுண்ணாம்பு பாறைகளால் ஆனவை எனவும் சொல்கின்றனர்.

இந்த குன்றை முட்டையிடும் மலை என்றும் அங்குள்ள மக்கள் அழைக்கிறார்கள். இந்த குன்றில் கல் முட்டைகள் வௌவேறு வடிவில் உருவாகிறது.

விசித்திரமான இம்முட்டைகளை கடவுள் முட்டைகள் என்றும், அதிர்ஷ்டம் தரும் முட்டைகள் என்றும் நம்புகின்றனர் அப்பகுதி மக்கள்.

அதுமட்டுமின்றி இந்த கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் ஒரு கல் முட்டையாவது இருக்கிறது.

அங்குள்ள மக்கள் முட்டையிடும் குன்றை கடவுளாக நினைத்து வழிபடுகின்றனர். இக்குன்றிலுள்ள ஒவ்வொரு முட்டைகளும் ஒவ்வொரு பாறையினால் ஆனவை.

இந்த குன்றில் எப்படி முட்டைகள் வடிவில் பாறை மாறுகிறது என்ற மர்மம் இன்றும் கண்டறியப்படவில்லை. இதைப் பற்றிய ஆய்வுகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன. 

மர்மம் நிறைந்த இந்த மலைக்குன்றுக்கு பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து இந்த அதிசய கல் முட்டையை பார்த்து செல்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stone egg for china


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->