கச்சத்தீவை திரும்ப தரனுமா.‌. "வாய்ப்பில்லை ராஜா".. இலங்கை அமைச்சர் திட்டவட்டம்.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக கச்சதீவு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. கச்சத்தீவு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தரவுகளை பகிர்ந்திருந்தார். 

இதுகுறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடி "கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டதற்கு அப்போதைய காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி தான் காரணம்" என குற்றம் சாட்டி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக தரப்பு கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி கட்ச தீவு மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தாரா? என கேள்வி எழுப்பியது. 

இதனால் கச்சத்தீவு உபகாரம் இரு கட்சிகளுக்கும் மத்தியில் பெரும் விவாதத்தினை கிளப்பியுள்ளது. இதற்கிடையே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கச்சத்தீவு தாரைவாக்கப்பட்டதற்கு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்தான் காரணம் கச்சத்தீவு தாரைவாக்கப்பட்டது காங்கிரஸ் செய்த துரோகம் என விமர்சனம் செய்திருந்தார்.

காங்கிரஸ் திமுக அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம்பெறறுள்ள வைகோவின் இந்த கருத்து அக்கூட்டமைக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கச்சத்தீவு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தம் "கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது. 

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் கட்சத் தீவு பெறப்பட்டுள்ளது. கச்சத்தீவை மீண்டும் இன் இந்தியாவுக்கு வழங்கினால் இலங்கையின் கடல் வளம் முற்றிலும் சூறையாடப்படும். இலங்கையில் இதுவை மடிபடகு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இழிவை படகுகளை பயன்படுத்தி இலங்கை கடல் பரப்புக்குள் சட்டவிரோதமாக நொடியும் இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் முற்றிலும் அடிக்கப்படுகிறது" என திட்டவட்டமாக கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilankan minister said katchatheevu connot return to India


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->