இலங்கை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் கைது.!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் உள்ள கொழும்புவில்  தேவாலயம் உட்பட  எட்டு  இடங்களில் தொடர்  வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 207 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தெடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.  

 இலங்கையில் 8 இடங்களில் நடந்த அடுத்தடுத்த குண்டுவெடிப்பில்  சுமார் 207 பேர் உயிரிழந்துள்ளனர் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.பலி எண்ணிக்கை மேலும்  உயரும் என அஞ்சப்படுகிறது .  இதனால் இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வதந்திகள் பரவலாம் என சமூக வலைத்தளங்களான டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப்   போன்றவை தற்காலிகமாக இலங்கை அரசால் முடக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் இந்த கொடூர தாக்குதலுக்கு ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள்தான் காரணம் என தெரியவந்துள்ளது இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்கள் என இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூபன் விஜயவர்தன   தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட ஏழு பேரை கைது செய்யும் போது நடந்த மோதலில் காவல்துறையினர் 3 பேர் உயிரிழந்ததாகவும் ரூவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srilanka bomb blast accuest arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->