வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி, வேன் ஊருக்குள் நுழைந்துள்ளது - உச்சகட்ட பீதியில் இலங்கை..! - Seithipunal
Seithipunal


இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறன்று (ஈஸ்டர் தினம்) 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 9 இடங்களில் நடை பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோரின் எண்ணிக்கை 350யை தாண்டியுள்ளது .

படுகாயம் அடைந்து 350-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் 45 பேர் குழந்தைகள் என யுனிசெப் கூறியுள்ளது. சுமார்ஒன்பது இடங்களில் குண்டு வெடித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசார ணைக்கு உதவத் தயாராக இருப்பதாக இன்டர்போல்எனப்படும் சர்வதேச காவல் துறை அறிவித்திருக்கிறது.

இலங்கைத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள இன்டர்போல், இலங்கை அரசு அதிகாரிகள் நடத்திவரும் விசாரணைக்கு உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்டர்போல் ட்விட்டர் பக்கத்தில், “இலங்கை குண்டுவெடிப்பு சம்பவ இடங்களை ஆராய்தல், வெடிகுண்டுகளை ஆய்வு செய்தல், தீவிரவாத தடுப்பு, பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண் பது மற்றும் பகுப்பாய்வு செய்வது ஆகிய வற்றில் சிறப்புத் திறன் பெற்றவர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பார்கள்” என தெரி வித்துள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு அச்சத்திலிருந்து மக்கள் வெளிவராத நிலை தொடர்கிறது. இலங்கையின் கொழும்பு நகருக்குள் முழுவதும் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி, வேன் நுழைந்துள்ளது என புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே கொழும்பு நகரம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப் பட்டுள்ளது. வாகனச் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilanka-blast-attackers-plan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->