இலங்கையில் தொடரும் பதற்றம்... பாதுகாப்புத்துறை செயலர் திடீர் ராஜினாமா.! - Seithipunal
Seithipunal


ஈஸ்டர் பண்டியையை ஒட்டி இலங்கையின் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டலை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. குண்டுவெடிப்பில் 10 இந்தியர்கள் உள்பட 359-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத், இந்த தாக்குதலை வெளிநாட்டு அமைப்பின் உதவியுடன் நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக ராய்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஊடகமான அமாக் (AMAQ) வெளியிட்டுள்ள செய்தியை குறிப்பிட்டு ராய்டர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், குண்டுவெடிப்பு நிகழ்த்திய தீவிரவாதிகள் 9 பேரின் புகைப்படங்கள் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. அதில் 3 பெண்களின் புகைப்படங்களையும் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, இலங்கை பாதுகாப்புத்துறை செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனவுக்கு அனுப்பி வைத்தார் ஹேமசிறி பெர்னாண்டோ.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri lanka secretary of defence resignation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->