நாட்டு வருமானம் மிச்சமானதால்.. பொதுமக்களுக்கு பிரித்து கொடுக்க சிங்கப்பூர் அரசு முடிவு: தலைக்கு 16 ஆயிரம் வரை கிடைப்பது உறுதி.!! - Seithipunal
Seithipunal


சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலின் போது அரசுக்கு 760 கோடி டாலர் வருவாய் உபரியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த பணத்தை பொதுமக்களுக்கு போனாஸாக பிரித்து கொடுப்பது என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஒரு குடிமகனுக்கு இந்திய ரூபாயில் 16 ஆயிரம் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பொழுது அதற்கு நிதி பற்றாக்குறை, இதற்கு நிதி பற்றாக்குறை என்ற வார்த்தை தான் அடிபட்டு காதாற கேட்டிருப்போம், ஆனால் சிங்கப்பூர் அதற்கு அப்படியே எதிர்மறையாக ஒரு செயலை செய்துகாட்டியிருக்கிறது.

சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு செலவைக் காட்டிலும் அதிக வருவாய் உள்ள பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் அந்நாட்டு அரசாங்கம் மீதமுள்ள வருவாய் அனைத்தும் பொதுமக்களுக்கு போனஸாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

சிங்கப்பூரின் நிதித் துறை அமைச்சர் ஹெங் ஸ்வீ கீட் நேற்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

அதன்போது சிங்கப்பூர் அரசுக்கு 46 ஆயிரத்து 877 கோடி ரூபாய் வருவாய் அதிகமாக கிடைத்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் கூடுதலாக வரும் வருவாயை அந்நாட்டு அரசு குடிமக்களுக்கு ஊக்கத்தொகையாக தரவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மக்களின் வருவாய்க்கு ஏற்ப 4 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை தகுதியின் அடிப்படையில் பிரித்து வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வாக்களிப்பது போலவே 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த ஊக்கத் தொகையை பெறத் தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Singapore-to-pay-bonus-to-all-citizens-after-surplus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->