உலக வரலாற்றில் முதல் முறையாக விமானத்தில் பறக்கவிருக்கும் பெண்கள்.எக்கச்சக்கமாக குவியும் வாழ்த்துக்கள்.! - Seithipunal
Seithipunal


சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் விமானம் ஓட்டவிருக்கும் சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தி, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 சவூதி உள்ளிட்ட அரபு நாடுகளில் பொருளாதாரம் நன்கு முன்னேற்றம் அடைந்த நிலையிலும் பெண்கள் சம்பந்தப்பட்ட சில விஷயங்களில் பெரிய அளவில் முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.

மேலும் அந்த நாடுகளில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஏராளம். இந்நிலையில் சவுதியின் இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்ற பிறகு பெண்களது முன்னேற்றமத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டது .

அதில் முக்கியமான ஒன்று பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கப்பட்டது இவரது இந்த முடிவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர் .

  

இந்நிலையில் தற்போது பெண்கள் சவுதி அரேபியாவில் விமானம் ஓட்டுவதற்கு அதிகளவில் முன்வந்துள்ளனர். பொதுவாக சவுதி விமானங்களில் சவுதி பெண்கள் பணியாற்ற மாட்டார்கள் இதற்காக பிலிப்பைன்ஸில் இருந்து பெண்கள் பணிக்கு கொண்டுவரப்படுவார்கள்.

இந்நிலையில் ரியாத்தை சேர்ந்த் ஃபிளைநாஸ் என்ற விமான நிறுவனம் தங்கள் விமானத்தில் பணியாற்ற சவுதியை சேர்ந்த பெண் துணை பைலட் மற்றும் பெண் பணியாளர்களுக்காக அழைப்பு விடுத்தது. இந்த நிலையில் சவுதியில்  துணை பைலட்டுகளாக பணியாற்ற மட்டும் 1000க்கும் மேலான பெண்கள் விண்ணப்பம் அனுப்பியுள்ளனர் . தொடர்ந்து விண்ணங்கள் வந்துகொண்டே இருக்கிறது.

இதனால் சவுதியின் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
மேலும் இச்சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

English Summary

saudi girls goes to work in flight

செய்திகள்Seithipunal