2 வீரர்களுடன் விண்வெளி சென்ற விண்கலம்.! அவசர அவசரமாக தரையிறக்கபட்டது.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா, கனடா, பிரேசில், இத்தாலி உள்பட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒன்றை அமைத்திருக்கின்றன. பூமியிலிருந்து 418 கி.மீ தொலைவில் இந்த விண்வெளி  ஆராய்ச்சி மையம் அமைந்திருக்கிறது. 6 மாதத்துக்கு ஒருமுறை 3 வீரர்கள் விண்வெளி மையத்தின் கட்டுமான பணிக்கு சென்று திரும்புகின்றனர்.
 
சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகில் இருக்கும் கிரகங்கள் மற்றும் அவற்றின் நிலவுகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் அங்கு இருக்கும் மனித வாழ்க்கைக்கு ஏதுவான சூழல் தொடர்பான ஆராய்ச்சிகள் அங்கு நடைபெற்று வருகிறது.  அமெரிக்காவின் நாசா மட்டுமல்லாமல் உலகின் பல தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதற்கான ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா சர்வதேச விண்வெளி மையத்திற்கு இரண்டு விண்வெளி வீரர்களை சுமந்து சென்ற  ரஷ்ய ராக்கெட் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு 2 விண்வெளி வீரர்களை சுமந்து சென்ற   ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம்  மத்திய கஜகஸ்தானில் ஷெஷ்காஸ்கானின் நகரத்திற்கு அருகே அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. மீட்புப் படையினர் அந்த இடத்தை அடைந்திருக்கின்றனர்.  இரண்டு விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி படுத்தினர்.
 

English Summary

Russia rocket emergency landingSeithipunal