உலகின் முதல் கப்பல் அணுமின் நிலையம் அமைத்து சாதனை.!!  - Seithipunal
Seithipunal


 

இரசியாவில் உள்ள ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி அமைப்பின் மூலம்., உலகத்தின் முதலாவது மிதக்கும் அணுமின் நிலயமானது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணுமின் நிலையத்திற்கு "அகடமிக் லோமோனோசோவ்" என்ற பெயரில் உருவாக்கப்பட்டு கப்பல் போன்று தோற்றமளிக்கிறது. 

இந்த மிதக்கும் அணுசக்தி நிலையம் குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தபோது., உலகத்தின் முதலாவது கப்பல் போன்ற மிதக்கக்கூடிய அனுசக்தி நிலையத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளோம். 

இதன் மூலம் 10 விழுக்காடு அளவிலுள்ள திறன் அடிப்படையில் அணுஉலை தொடங்கப்பட்டு பின்னர் இரசியாவின் பெவெக் நகருக்கு., இலையுதிர் காலம் தொடங்குவதற்குள் உற்பத்தியை தொடங்கும் என்று தெரிவித்தார். மேலும் இதன் மூலம் தொலைதூரத்தில் இருக்கும் கிராமங்களுக்கும் மின்விநியோகம் எளிதில் செய்ய முடியும் என்று தெரிவித்தார். 

மேலும்., இந்த அணுமின் நிலையத்தின் மூலம் இரசியாவின் ஆர்டிக் பகுதிகள் மட்டுமல்லாமல்., உலகம் முழுவதும் சிறிய அளவிற்கு தேவைப்படும் மின்சார விநியோகத்திற்கு இதனை உபயோகம் செய்துகொள்ளலாம். அந்த வகையில்., அணுசக்தி தொழில்நுட்பத்தில் இரசியாதான் முதலிடத்தில் இருக்கும் என்று தெரிவித்தார்.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RUSSIA FLOATING NUCLEAR POWER PLANT


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->