பதவி விலகும் ராஜபக்ஷே என்ன நடக்கிறது இலங்கையில்! - Seithipunal
Seithipunal


 

இலங்கை அரசியலில் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலையே நிலவி வருகிறது.இலங்கை அதிபர் மைத்திரிக்கும், பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில், அதிபர் மைத்திரி ரணிலை பதவி நீக்கம் செய்து விட்டு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷேவை பிரதமராகினர்.

இது பொதுமக்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நீதிமன்றமும் ராஜபக்ஷே பதிவி வகிப்பது செல்லாது எனக் கூறியது.

இந்நிலையில் ராஜபக்ஷே நாளைப் பதவி விலகுவார் என்று அவரின் மகன் நமல் ராஜபக்ஷே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

" நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த, முன்னாள் அதிபர் ராஜபக்ஷே நாளை பிரதமர் பதவியிலிருந்தது விலகுகிறார்.  நாளை அவர் பொதுமக்களுக்கு உரை நிகழ்த்துகிறார், அதன் பின் அவர் பதவியிலிருந்து விலகுவர். அவருக்கு துணை நிற்கும் இலங்கை பொதுமக்கள் முன்னணியும், இலங்கை சுதந்திரக் கட்சியும், பிற கட்சிகளும் இணைந்து மெகாக் கூட்டணி அமைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன" என்று நாமல் தெரிவித்துள்ளார்.

இன்று காலை அதிபர் மைத்திரையை ராஜபக்ஷே சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார்.  நேற்றிரவு, பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணிலுடன் பேச்சு நடத்திய அதிபர் மைத்திரி, தற்போதைய சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை பிரதமர் பதவியை ஏற்குமாறு கூறியதாகவும், அதற்கு ரணில் பெரும் எதிரப்பு தெரிவித்த நிலையில், ஜெயசூர்யாவும் மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது. 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்சுமன யாப்பா அபேவர்த்தனாவும் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.  நாளைக் காலை மகிந்தா பொது மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார். அதைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார். பின்னர் தன் பதவியை ராஜினாமா செய்கிறார் எனக் கூறியுள்ளார். 

இரு மாதங்களே இந்த பதவியில் நீடித்த ராஜபக்ஷே பதவி விலகுவதைத் தொடர்ந்து, மறுபடியும் இலங்கை அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajapaksa Resigns


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->