பிலிப்பைன்ஸை புரட்டி எடுத்த புயல்.! கரையை கடந்தும் 7 நாட்களாக கொட்டி தீர்க்கும் மழை.!! 126 பேர் பரிதாப பலி.!!  - Seithipunal
Seithipunal


பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பகுதிகளில் இருக்கும் மாகாணங்களை சென்ற மாதத்தின் இறுதியில் 29 ம் தேதியன்று பயங்கர புயல் ஒன்று தாக்கியது. 

அந்த புயல் தாக்கியதில் அந்த பகுதிகளில் கடுமையான மழை பெய்து அங்குள்ள ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து., பல்லாயிரக்கணக்கான வீடுகள் நீரில் முழ்ங்கி பல வீடுகள் நிலச்சரிவில் சிக்கியது.

இதன் காரணமாக அங்குள்ள மக்களில் பலர் நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக பலியாகினர்., முதலறிக்கையாக சுமார் 68 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில்., மக்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும்., மீட்பு பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கும் வேளையில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமலும்., சில இடங்களில் மீட்பு பணிகள் தாமதமும் ஏற்பட்டுள்ளது. 

இந்த புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி 7 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்., நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி தற்போது வரை 126 பேர் பலியானதாகவும்., 26 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Philippines storm now 126 peoples died by flood and land slide


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->