பிலிப்பைன்ஸில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பிலிப்பைன்ஸில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பிலிப்பைன்ஸ் தென்கிழக்கு பகுதியில் உள்ள போலிலோ தீவில் இருந்து  157 பயணிகளுடன் எம்.வி.மெர்கிராஃப்ட் என்ற படகு ரியல் நகரினை நோக்கி சென்றுள்ளது.

அப்பொழுது மணிலாவை சென்றடைய 60 கிலோமீட்டர் இருந்த நிலையில் படகில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிர் இழந்த நிலையில் 23 பேர் காயமடைந்துள்ளனர். 

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கடலோர காவல்படை அதிகாரிகள் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் இந்த தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Philippines boat fire accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->