ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையா..? மருத்துவ உலகை அலற விட்ட சம்பவம்: இறுதியில் என்ன நடந்தது..? - Seithipunal
Seithipunal


உலகின் முதலாவது ஆணுறுப்பு மாற்று அறுவைசிகிச்சை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரின் ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

11 மருத்துவர்கள், சுமார் 14 மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் செய்த இந்த அறுவை சிகிச்சைதான் உலகின் முதலாவது ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சையாகும்.

இதேபோன்ற சிகிச்சையை இனி மற்றவர்களுக்கும் செய்ய முடியும் என்று மருத்துவர்கள் தற்போது நம்புகின்றனர்.

இந்த இளைஞருக்கு பொருத்தப்பட்ட இந்த ஆண்குறியானது இறந்த பிறகு பல உடல் உறுப்புக்களை தானம் செய்த கொடையாளி ஒருவரிடமிருந்தே பெறப்பட்டுள்ளது.

மரணமடைந்த ஒருவரது குடும்பம், அவரது இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றை தானம் செய்ததோடு அவரது ஆண்குறியையும் கொடையாக வழங்கியுள்ளனர்.

அவரது மற்றைய உடல் உறுப்புக்கள் வழங்கப்பட்ட வழியிலேயே இந்த ஆண்குறியும் வழங்கப்பட்டது என்று மருத்துவர் தெளிவுபடுத்தினார்.

அதேசமயம், மற்ற உறுப்புகளைப் போலன்றி ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சை என்பது உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

penile transplant


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->