மேகக்கூட்டங்களே கீழே இருப்பது போல் காட்சி... பமுக்காலே வெந்நீரூற்றுகள்.! - Seithipunal
Seithipunal


இந்த இயற்கை நமக்கு ஏராளமான வளங்களை வாரி வழங்கிகொண்டுதான் இருக்கிறது. அதில் பல வியக்கத்தக்கதாகவும், அதிசயக்கதக்கதாகவும் விளங்குகின்றது.

இயற்கையின் அருங்கொடையாக உலகுக்கு வழங்கப்பட்ட அற்புதப் படைப்புக்களுள் ஒன்று வெந்நீரூற்றுக்கள்.

நீர் என்றாலே அது இந்த இயற்கை நமக்கு கொடுத்த பெரும் கொடை. சாதாரணமாக பூமிக்கடியிலிருந்து வரும் நீரின் வெப்பநிலை என்னவாக இருக்கும். அந்தந்த இடங்களின் தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்ப நீரின் வெப்பநிலையானது இருக்கும். 

ஆனால், நாம் இங்கு காண இருக்கும் வெந்நீரூற்றின் வெப்பநிலை நம்மை வியக்க வைக்கும் வகையில் உள்ளது. இந்த வெந்நீரூற்றுகளால் நோய்கள் கூட குணமாகுமாம்.

எங்கு இருக்கிறது இந்த வெந்நீரூற்று?

பமுக்காலே (Pamukkale) வெந்நீரூற்றுகள் துருக்கி நாட்டின் மேற்கே டினிசிலி (Denizli) மாகாணத்தில் அமைந்துள்ளன. 

உலகிலேயே இது ஒன்றுதான் அற்புத வெந்நீரூற்றாகத் திகழ்கின்றது. இது யுனெஸ்கோ அமைப்பினால் பாதுகாக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வெந்நீரூற்று 2700 மீட்டர் நீளமும், 600 மீட்டர் அகலமும், 160 மீட்டர் உயரமும் கொண்டது.

இதிலிருந்து வெந்நீர் வெளியேறுகின்றது. பார்ப்பதற்கு பழுப்பு நிறத்தில் காணப்படும் இது, கால்சியம் கார்பனேட் அதிகளவு கொண்டிருக்கிறது. 

எப்போதுமே இதனுடைய வெப்பநிலை 35 டிகிரியிலிருந்து 100 டிகிரி செல்சியஸ் வரை காணப்படும்.

இதன் நீர் சுண்ணாம்புக் கலவையை அதிகளவில் கொண்டிருப்பதால், நீர் பாய்ந்து வரும் பகுதிகளில் கனிம படிவுப்பாறைகள் (செடிமெண்ட்டரி பாறைகள்) உருவாகின்றன.

இப்பாறைகள் பார்ப்பதற்குப் பனிக்கட்டிகள் போன்றே தோற்றமளிக்கும். இதனை பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். ஏதோ ஒரு பனிப்பிரதேசத்தில் இருப்பது போன்ற உணர்வு தோன்றும். 

வானத்தில் இருக்கும் மேகக்கூட்டங்கள் போல மிகவும் அழகாக காட்சியளிக்கும். இந்த இடத்தை பஞ்சுக் கோட்டை என்றும் கூட அழைக்கின்றனர். 

நோய்களை குணமாக்கும் வல்லமை :

இந்த வெந்நீரூற்றுகள் 17 நீரூற்றுக்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் வௌ;வேறு வகையான வெப்பநிலையைக் கொண்டவை. இதில் நீராடினால் நோய்கள் குணமாகுமாம். 

இதய நோய்கள், குருதிச்சுற்றோட்டச் சிக்கல்கள், உயர்குருதி அமுக்கம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வாத நோய்கள், கண் மற்றும் தோல் சார்ந்த நோய்கள், உடல் களைப்பு, மன உளைச்சல், செரிமானச் சிக்கல் குறைபாடுகள் ஆகியவற்றைக் குணமாக்கக் கூடிய சக்தி இவ்வெந்நீருற்றுக்கு இருக்கிறதாம்.

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்த வண்ணமுள்ளனர். 

இவ்வெந்நீரூற்றுக்களைச் சென்றடைய, பள்ளத்தாக்கின் கீழேயும், மேலேயும் பல வீதிகள் போக்குவரத்து வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

ஆனால், இவ்வீதியில் மோட்டார் ஊர்திகள் (தானுந்துகள்) செல்ல மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது. 

இவ்வெந்நீரூற்றுக்களுக்குக் காலணிகளுடன் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. பமுக்காலே வெந்நீரூற்றுக்களைப் பாதுகாக்க பற்பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உங்களுக்கும் துருக்கி செல்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தால் இந்த இடத்திற்கு செல்ல மறக்காதீர்கள்!!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pamukkale


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->