பாகிஸ்தான் பள்ளியில் இந்தியபாடலுக்கு நடனம்.! கண்டனம் தெரிவித்து எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை! விளக்கமளித்த பள்ளி நிர்வாகம்! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் கராச்சியில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றுள்ளது. இதில் மாணவர்கள் கலந்துகொண்டு பல பாடல்களுக்கு நடனமாடியுள்ளனர். மேலும் அவர்கள் இந்தியாவை பற்றிய பாலிவுட் பாடல் ஒன்றையும் தேர்வு செய்து நடனம் ஆடியுள்ளனர். அவர்களுக்கு பின்னால்  இந்திய தேசிய கொடி அசைக்கப்பட்டுள்ளது.

இந்த நடன வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் இதற்கு அந்நாட்டு பொதுமக்கள் மற்றும் பல அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளிக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

 இதனை தொடர்ந்து விழா நடத்திய பள்ளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு  பள்ளியின் பதிவு தடை  செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பள்ளியின் துணை முதல்வர் கூறுகையில், பள்ளியில் நடைபெற்ற கலாச்சார விழாவில் பல்வேறு நாடுகளின் கலாசாரம் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி அமெரிக்கா, சவூதி அரேபியா,பாக்கிஸ்தான், எகிப்து, இந்தியா மற்றும் பல நாடுகளின் கலாசாரங்களை வெளிப்படுத்தியும்  மாணவர்கள் நடனமாடினர். ஆனால் ஒரு சில செய்தியாளர்கள்  இந்திய கலாசாரத்திற்கு நடனமாடியதை மட்டும் செய்தியாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan school registration cancelled for dance to indian song


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->